Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதத்திற்கு அரசியல் காரணமல்ல: மத்திய அமைச்சர் மாண்டவியா ஓபன் டாக்..!
Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு நடைமுறைச் சிக்கல் தான் காரணமே தவிர, அரசியல் காராணம் எதுவும் இல்லை என மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் மனு செய்து இருந்தார்.இந்த மனு விசாரணையின் போது மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தது இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, மத்திய முதன்மைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,