மேலும் அறிய

தமிழில் பேசி அசத்திய அருணாச்சல் மருத்துவர்.. காத்திருந்த ஆச்சரியம் இதுதான் மக்களே..

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர், மெட்ராஸ் படைப்பிரிவு ராணுவ வீரருடன் தமிழில் தெளிவாக உரையாடுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். பழமை வாய்ந்த பல்வேறு மொழிகளின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. சில மொழிகளில் சில பொதுவான சொற்கள் உள்ளன. ஆனால், கிழக்கு அல்லது வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் தென்னிந்தியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

இந்த சூழலில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர், மெட்ராஸ் படைப்பிரிவு ராணுவ வீரருடன் தமிழில் தெளிவாக உரையாடுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த உரையாடலின் வீடியோவை அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மருத்துவர் லாம் டோர்ஜி, மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ வீரருடன் சரளமான தமிழில் பேசுவதை பார்க்கலாம். தமிழை கற்பதற்கு முன்பு பல ஆண்டுகளாக, லாம் தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்றதாக காண்டு குறிப்பிட்டுள்ளார்.

தவாங்கில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஓம்தாங்கில், ராணுவ வீரரும் மருத்துவரும் முதன்முதலில் சந்தித்தபோது தமிழில் பேசிக் கொள்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. 

வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காண்டு, "தமிழ்நாட்டில் லாம் டோர்ஜி மருத்துவம் பயின்றுள்ளார். மெட்ராஸ் படைப்பிரிவு வீரரிடம் சரளமாக தமிழில் பேசி அவரை ஆச்சரியப்படுத்தினார். அவர்கள் தவாங்கில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஓம்தாங் என்ற இடத்தில் சந்தித்தனர்.

உண்மையான தேசிய ஒருமைப்பாட்டுக்கு என்ன ஒரு உதாரணம்! நமது மொழியியல் பன்முகத்தன்மை குறித்து பெருமை கொள்கிறோம்.

இதற்கிடையில், இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பயனர்கள், பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். "இது இந்தியாவின் பலம்" என பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ​"இப்படிதான் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும்" என ​மற்றொரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget