மேலும் அறிய

கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?

தொன்மையான மற்றும் பிரபலமான கோவில்களுக்கு பெயர் பெற்றது சபரிமலை, ஆட்டுக்கால் பகவதி கோவில், பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் கேரளாவில் அமைந்துள்ளன.

கேரள மாநிலம் தொன்மையான மற்றும் பிரபலமான கோவில்களுக்கு பெயர் பெற்றது சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் கேரளாவில் அமைந்துள்ளன. எனினும் கேரளாவில் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சில வழிபாட்டு நிகழ்வுகளின்போது ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளில் போது பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அதேபோல் வழக்கமான நாட்களில் ஆண்கள் இந்த கோவில்களில் நுழையவோ, வழிபாடு செய்யவோ எந்தவித தடையும் இல்லை. அப்படி ஆண்கள் நுழைய முடியாத கோவில்களை பற்றியும், எந்த சமயங்களில் ஆண்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.


கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி கோவில் (Attukal Bhagavathy Temple) உலகப் புகழ்பெற்றது. இக்கோவிலின் மூலவர் சிலப்பதிகார நாயகி கண்ணகியாக வணங்கப்படுகிறார். சிலப்பதிகார நாயகி கண்ணகியின் அவதாரமாகப் போற்றப்படும் இக்கோவில் "பெண்களின் சபரிமலை" என்று அழைக்கப்படுகிறது. மதுரையை எரித்த பின் கொடுங்கல்லூர் செல்லும் வழியில் கண்ணகி இங்குத் தங்கியதாக ஐதீகம். இந்தக் கோவிலில் பெண்கள் மட்டுமே வழிபடச் செல்கின்றனர், ஆண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கமான நாட்களில் ஆண்கள் இக்கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதி உண்டு. ஆனால், ஆண்டு தோறும் நடைபெறும் புகழ்பெற்ற 'ஆற்றுக்கால் பொங்கலை' திருவிழாவின்போது கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்கள் நுழைய அனுமதி இல்லை.

சக்களத்துகாவு பகவதி கோவில்

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் பம்பை மற்றும் மணிமலை ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் (Chakkulathukavu Sree Bhagavathi Temple), சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போலவே இங்கேயும் பெண்கள் இருமுடி கட்டி, கடுமையான விரதம் இருந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

கேரளாவில் உள்ள சக்குளத்துக்காவு ஸ்ரீ பகவதி கோவிலில் ஆண்டுதோறும் 'நாரி பூஜை' (Naari Puja) என்ற முக்கியமான சிறப்புச் சடங்கு நடைபெறுகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையன்று வரும் இந்தச் சடங்கு நாளில், பெண்களைச் சக்தியின் வடிவமாகப் போற்றும் வகையில், பெண் பக்தர்கள் சிறப்பு இருக்கைகளில் அமர்ந்திருக்க, ஆண் அர்ச்சகர்களால் அவர்களின் பாதங்கள் கழுவி, அவர்களைத் தெய்வமாகக் கருதிப் போற்றி வழிபாடு செய்வார். இக்கோவிலில் நடக்கும் 'நாரி பூஜை'  நேரத்தில், ஆண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது. அதாவது, பெண்களின் சக்தியையும் கவுரவத்தையும் முன்னிறுத்தும் இந்த ஒரு நாள் விழாவில், தூய்மையையும் தனித்துவமான வழிமுறைகளையும் பேண ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.


கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?

கொட்டங்குளங்கரை தேவி கோவில்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாவரா (Chavara) பகுதியில் அமைந்துள்ள கொட்டங்குளங்கரை தேவி கோயில் (Kottankulangara Devi Temple) அங்குள்ள பகவதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற வழிட்டுத் தலமாகும்.

இக்கோவிலின் மூலவர் தேவி சிலை மனிதர்களால் உருவாக்கப்படவில்லை; சுயம்புவாக (தானாகத் தோன்றியதாக) உருவானது என்ற ஐதீகம் நிலவுகிறது. இக்கோவிலின் கருவறைக்கு மேல் கூரை அல்லது விமானம் எதுவும் கிடையாது. வானம் திறந்தே காணப்படும் இந்த அமைப்பு வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும். இக்கோவிலில் நடைபெறும் சில சிறப்பு யோக/தந்திர சடங்குகளின்போது பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. குறிப்பிட்ட வழிபாட்டு நேரங்களின் போது ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பெண்கள் மட்டுமே வழிபாடுகளை நடத்துவர். ஆண்கள் தங்களின் அகந்தையை நீக்கி, முழுமையான பக்தியுடன் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து தேவியை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget