மேலும் அறிய

இந்தியாவில் சொகுசு ரயில் பயணம்: அரண்மனை அனுபவம், பிரமிக்க வைக்கும் இடங்கள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ரயில் பயணம் என்பது சாதாரண அனுபவம் மட்டுமல்ல. இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்கு அரச வாழ்க்கை அனுபவிக்கும் வகையில் சில ஆடம்பர ரயில்களை இயக்குகிறது.

இந்த ரயில்கள் பயணிகளை அரண்மனை போன்ற உட்புறத்தோற்றங்கள், நுணுக்கமான உணவு வகைகள், நவீன வசதிகளுடன் கூடிய தனித்துவமான பயண அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இந்த ரயில்கள் ஒவ்வொரு வழித் தடத்திற்கும் ஏற்ப, பயணிகளுக்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்கவும், சிறந்த ஹோட்டல்களில் தங்கவும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த சொகுசு ரயில்களில் சிறந்த உணவு விடுதிகள், பார்கள், புகை கண்டறியும் கருவிகள், மற்றும் ஸ்மார்ட் அறைகள் போன்ற நவீன வசதிகள் அனைத்தும் உள்ளன. இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு சில சொகுசு ரயில்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் சொகுசு ரயில் பயணம்: அரண்மனை அனுபவம், பிரமிக்க வைக்கும் இடங்கள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் (Maharajas’ Express)

இந்தியாவிவிருக்கும் சொகுசு ரயில்களில் மிகவும் ஆடம்பரமானதாக இது கருதப்படுகிறது. பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட அறைகள், சரவிளக்குகள் தொங்கும் உணவகங்கள், மற்றும் பழமையான கோட்டைகள், அரண்மனைகள் எனப் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு போன்றவற்றை இந்த ரயில் வழங்குகிறது. நீங்கள் டெல்லி அல்லது மும்பையில் இருந்து புறப்படலாம். இந்த ரயில் ராஜஸ்தானின் அரச நகரங்கள் வழியாகப் பயணிக்கிறது. உலக டிராவல் விருதுகளில் (World Travel Awards) 2012 முதல் 2018 வரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக "உலகின் முன்னணி சொகுசு ரயில்" என்ற விருதை இந்த ரயில் வென்றுள்ளது.

பயணச் செலவு: ஒரு நபருக்கான கட்டணம் ரூ.4,34,880 முதல் தொடங்குகிறது (2 பேர் பகிரும் டீலக்ஸ் அறைகளுக்கு). ஒரு நபருக்கான தனி டீலக்ஸ் அறைக்கு ரூ.3,28,380 முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் சொகுசு ரயில் பயணம்: அரண்மனை அனுபவம், பிரமிக்க வைக்கும் இடங்கள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பேலஸ் ஆன் வீல்ஸ் (The Palace on Wheels)

ராஜஸ்தானின் அரச பாரம்பரியத்தையும், ராஜபுத்திரர்களின் வாழ்க்கை முறையையும் அனுபவிக்க விரும்பினால், "பேலஸ் ஆன் வீல்ஸ்" சிறந்த தேர்வாகும். ஜெய்ப்பூர், உதய்ப்பூர், ஜோத்பூர், மற்றும் ஜெய்சல்மேரின் பாலைவனப் பகுதிகள் வழியாக இந்த ரயில் பயணிக்கிறது. ஒட்டகச் சவாரி, கலாசார நிகழ்ச்சிகள், மற்றும் நட்சத்திரங்களுக்குக் கீழ் இரவு உணவு போன்ற அனுபவங்களும் இதில் அடங்கும்.

பயணச் செலவு: ஒரு இரவுக்கு ஒரு நபருக்கான கட்டணம் டபுள் ஷேரிங் அறைக்கு ரூ.80,000 முதல் தொடங்குகிறது. தனி அறைக்கு ஒரு இரவுக்கு ரூ.1,23,100 முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் சொகுசு ரயில் பயணம்: அரண்மனை அனுபவம், பிரமிக்க வைக்கும் இடங்கள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

டெக்கான் ஒடிசி (Deccan Odyssey)

மராட்டியப் பேரரசின் பெருமையைக் காண இது ஒரு சிறந்த வழி. நாசிக் திராட்சைத் தோட்டங்கள், கோவாவின் கடற்கரைகள், மற்றும் அஜந்தா-எல்லோரா குகைகள் உள்ளிட்ட ஆறு வெவ்வேறு வழித்தடங்களில் இந்த ரயில் பயணிக்கிறது. இதில் சிறிய உடற்பயிற்சிக் கூடம், மாநாட்டு கூடம், மற்றும் ஆயுர்வேத ஸ்பா போன்ற வசதிகளும் உள்ளன. பயணச் செலவு: ஒரு நபருக்கான கட்டணம் டீலக்ஸ் டபுள் ஷேரிங் அறைக்கு ரூ.6,87,000 முதல் தொடங்குகிறது. பிரசிடென்ஷியல் சூட்-இன் கட்டணம் ரூ.17,60,000 முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் சொகுசு ரயில் பயணம்: அரண்மனை அனுபவம், பிரமிக்க வைக்கும் இடங்கள் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கோல்டன் சாரியட் (Golden Chariot)

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சொகுசு ரயிலாகக் கருதப்படும் "கோல்டன் சாரியட்", இப்பகுதியின் வளமான கலாசாரத்தையும், இயற்கை அதிசயங்களையும் காண்பிக்கிறது. இதன் உணவகங்கள் ஹம்பி மற்றும் ஹலேபிடு கோவில்களின் கட்டிடக்கலை அம்சங்களால் ஈர்க்கப்பட்டு, வாழை இலையில் பரிமாறப்படும் பாரம்பரிய விருந்துகள் முதல் நவீன உணவு வகைகள் வரை அனைத்தையும் வழங்குகிறது. மைசூரு, ஹம்பி, பாதாமி, தஞ்சாவூர் போன்ற கலாசார நகரங்களை உள்ளடக்கிய ஆறு வழித்தடங்களில் நீங்கள் பயணிக்கலாம்.

குறிப்பு: ஒரு நபருக்கான கட்டணம் குறைந்த தூரப் பயணத்திற்கு ரூ.2,65,440 முதல் தொடங்குகிறது. நீண்ட தூரப் பயணத்திற்கு ரூ.3,98,160 முதல் தொடங்குகிறது.

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget