ரூ.100 கோடி தேர்தல் நிதி: பாஜக-வுக்கு வழங்கிய லாட்டரி மார்ட்டின்!
அவருக்கு சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸஸ் நிறுவனம் மூலம் வழங்கியுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருந்த சமயத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு, தேர்தல் நிதியாக 100 கோடி ரூபாயை கோவையை சேர்ந்த லாட்டரி மார்ட்டின், அவருக்கு சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் மூலம் வழங்கியுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தால், தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியினைப் பெற்று வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதுடெல்லியைச் சேர்ந்த ப்ருடெண்ட் எலக்டோரல் டிரஸ்ட், இந்திய தேர்தல் ஆணையருக்கு சமர்ப்பித்துள்ள. 2021 அக்டோபர் 20-ம் தேதியிட்ட கடிதம் மூலம் இத்தகவல் வெளிவந்துள்ளது.
Forget Adani and Ambani. The man to watch out for is lottery king Santiago Martin and who all he funds. Interesting times ahead in Indian politics.
— Rohini Singh (@rohini_sgh) December 4, 2021
இந்த கடிதத்தில். ப்ரூடெண்ட் எலக்டோரல் டிரஸ்ட் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தெரிவித்துள்ள தகவல்கள் பின்வருமாறு: 2020-21-ம் நிதியாண்டில் தேர்தல் நிதியாக ரூ. 245.72 கோடி பெறப்பட்டு, அதில் ரூ. 209 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது 19 பெரு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்ச தேர்தல் நிதியாக 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். அவருக்கு சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கியுள்ளார். 2021 மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலா ரூ.50 கோடி வீதம், மொத்தம் 100 கோடி ரூபாயை அவர். பாஜகவுக்கு தேர்தல் நிதியாக அளித்துள்ளார்.
Out of 245.72 crore Prudent Electoral Trust got from 19 entities in FY 2021, 209 crore went to BJP, 2 crore to Congress and 34 crore to other regional parties.
— Arvind Gunasekar (@arvindgunasekar) December 4, 2021
100 crore came from Coimbatore based Future Gaming and Hotel Services, (Martin) ahead of assembly elections in TN. pic.twitter.com/O0UgSTfnNs
மேலும் இந்த நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சிக்கும், 34 கோடி ரூபாய் பல்வேறு இதர மாநில கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த டிரஸ்ட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். அதிகம் பேசப்படுகின்ற அதானி. அம்பானி. டாடா, பிர்லாக்களை விடவும் மிக அதிகமாக தேர்தல் நிதியை வழங்கியதன் மூலம், இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறார்.