Watch Video: மக்களவையில் நுழைந்த 2 பேர்: சரமாரியாக தாக்கிய எம்.பிக்கள்! வெளியான வீடியோ
அத்துமீறல் நடந்தபோது ராகுல்காந்தியும் அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
![Watch Video: மக்களவையில் நுழைந்த 2 பேர்: சரமாரியாக தாக்கிய எம்.பிக்கள்! வெளியான வீடியோ Lok Sabha Security Breach Today MPs Beats Intruders Who Entered Parliament House - Watch Video Watch Video: மக்களவையில் நுழைந்த 2 பேர்: சரமாரியாக தாக்கிய எம்.பிக்கள்! வெளியான வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/13/e24c6f5c61a4c9d0087da54ff0663e781702465795275333_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவையில் அத்துமீறி புகுந்து புகை குண்டு வீசிய 2 பேரை பிடித்து எம்.பிக்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் 2 பேரையும் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் கடுமையாக தாக்குகின்றனர். முன்னதாக, நாடாளுமன்றத்தில் 2 நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். மேலும் புகை குண்டையும் வீசினர். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த எம்.பிக்கள் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இதனிடையே நாடாளுமன்றத்திற்கு வெளியே இரண்டு பெண்கள் புகைகுண்டு வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரத் மாதா கி ஜே; வந்தே மாதரம் என அந்த பெண்கள் முழக்கமிட்டனர்.
In Parliament 🤯🤯#ParliamentAttack #Parliament BJP MP Pallavi #देश_का_सिपाही_हनुमान_बेनीवाल #jjk245 #ThalaForAReason #Dhoni Rizwan #ImranKhanPTI #BJPFailsIndia Hassan Ali #RIPZahara Cricket Australia #SalaarFirstSingle #DOMS pic.twitter.com/4mQTDO7W4C
— Simple man (@ArbazAh87590755) December 13, 2023
இந்த போராட்டம் குறித்து பெண்கள் கூறுகையில் மணிப்பூருக்காக இந்த போராட்டம் என தெரிவித்தனர். மேலும், சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் மணிப்பூர் வன்முறையை எதிர்த்தும் இந்த போராட்டம் எனத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர் பாதுகாப்பு படையினர். நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த அத்துமீறல் நடந்தபோது ராகுல்காந்தியும் அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரத்தில்தான் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவரை எம்.பிக்கள் பிடித்து தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)