Rahul Gandhi: ஸ்மார்ட் பாயாக மாறிய ராகுல் காந்தி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். மே 20 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் ரேபரேலி தொகுதியும் இடம் பெற்றுள்ளது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் மே 20, 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி ஆகிய 3 கட்ட வாக்குப்பதிவு மட்டுமே இன்னும் உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார் என்ற போட்டி காங்கிரஸ், பாஜக இடையே கடுமையாக நிலவுகிறது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். மே 20 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில் ரேபரேலி தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இதற்கான வேட்புமனுவை கடைசி நாளில் தான் ராகுல் காந்தி தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து தனது முதல் பரப்புரை கூட்டத்திலும் கலந்து கொண்டு பாஜகவை வறுத்தெடுக்கும் வகையில் பேசினார்.
चुनाव की तैयारी पूरी है, लेकिन हेयर कटिंग भी जरूरी है।
— Congress (@INCIndia) May 13, 2024
हम ऐसे ही हुनरमंद नौजवानों के हक के लिए लड़ रहे हैं, देश के विकास में इनकी हिस्सेदारी मांग रहे हैं।
📍 रायबरेली, उत्तर प्रदेश pic.twitter.com/iTfEzkDGsh
இப்படியான நிலையில் அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “எனது குடும்பத்துக்கும் ரேபரேலி தொகுதி மக்களுக்கும் இடையேயான பந்தம் மிகவும் ஆழமானது. இங்குள்ள மக்களுக்காக என்னுடைய குடும்பம் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அம்பானி மற்றும் அதானி ஆகிய தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார்” என தெரிவித்தார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம், “உங்கள் திருமணம் எப்போது நடக்கும்?” என கேள்வியெழுப்பினார். அதற்கு விரைவில் நடக்கும் என அவர் பதிலளித்தார்.
பின்னர் ரேபரேலியில் உள்ள உள்ளூர் முடி திருத்தும் கடை ஒன்றுக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு தாடியை ட்ரிம் செய்து கொண்டு மீண்டும் இளைஞர் தோற்றத்துக்கு மாறினார். அவரின் புதிய தோற்றத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது வைரலாகியுள்ளது.