Watch Video | விமானத்தில் பயணித்த குட்டிச்சிறுமிக்கு, அப்பா கொடுத்த க்யூட் சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ
க்யூட்டாக இச்சிறுமி செய்த செய்கைகள், கை அசைவு, அப்பாவினை செல்லக்குரலில் அழைத்தது என அத்தனையும் ரசிக்கும் வகையில் இருந்தது. இன்ஸ்டா வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களைத் தெறிக்கவிடுகின்றனர்.
![Watch Video | விமானத்தில் பயணித்த குட்டிச்சிறுமிக்கு, அப்பா கொடுத்த க்யூட் சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ little girl surprised after seeing her pilot dad on same flight.. videoes goes on viral.. Watch Video | விமானத்தில் பயணித்த குட்டிச்சிறுமிக்கு, அப்பா கொடுத்த க்யூட் சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/2d119fc83ff4574281b6d22d5a9a9e60_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விமானத்தில் பைலட்டாக தந்தையைப் பார்த்த சிறுமி உற்சாகத்துடன் பப்பா, பப்பா என்று கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு அப்பா என்றாலே அளப்பெரிய மகிழ்ச்சியாக தான் இருக்கும். சைக்கிள், பைக், கார் என எதில் அப்பாவுடன் பயணத்தாலும் விமானத்தில் பறப்பது போன்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள். அதிலும் விமானத்தை தன் தந்தையே இயக்கினால் சொல்லவா வேண்டும்…அப்படி ஒரு க்யூட்டான நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்ததோடு இந்த வீடியோ இணையத்தையும் கலக்கியும் வருகிறது. சிறுமி ஷனயா மோதிஹார் தனது முதல் விமானப்பயணத்தை தனது தாயுடன் மேற்கொள்ளவிருந்தார். முதல் விமானப்பயணம் என்பதால் மிகுந்த குஷியில் ஏர்போர்டிற்குள் வலம் வந்த இச்சிறுமி, தன்னுடைய பிளைட் டிக்கெட்டுடன் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த விமானத்தில் பைலட்டாக தனது அப்பாவைப் பார்த்ததும் மிகுந்த சந்தோஷத்தில் அப்பா, அப்பா என்று அழைந்துள்ளார். இதனைப்பார்த்த இச்சிறுமியின் அப்பா டாட்டா காட்டி மகிழ்ச்சியுடன் சென்றிருப்பார்.
View this post on Instagram
அந்நேரத்தில், தன்னுடைய அப்பாவை விமானத்தில் பைலட்டாகப் பார்த்த இச்சிறுமி கொடுத்த ரியாக்சனை முழுவதுமாக வீடியோ எடுத்து அதனை சிறுமியின் தாய் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. க்யூட்டாக இச்சிறுமி செய்த செய்கைகள், கை அசைவு, அப்பாவினை செல்லக்குரலில் அழைத்தது என அத்தனையும் ரசிக்கும் வகையில் இருந்தது. இதனாலே இந்த வீடியோ 1.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இணையத்தைக் கலக்கிவருகிறது.
முதல் விமானப்பயணம், அதிலும் தந்தை பைலட் என்றால் சொல்லவா வேண்டாம் என்று இதுக்குறித்து இன்ஸ்டாவில் சிறுமியின் தாய் பிரியங்கா பதிவிட்டுள்ளார். மேலும் விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டமிட்டிருந்தோம். ஆனால் கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்று என்பதால் எங்களால் இதனை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் தான் சரியான நேரம் கிடைத்ததும் என் குழந்தையை டெல்லி வரை விமானத்தில் அழைத்துச் சென்றோம் எனவும், அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்த தன் தந்தை பைலட்டாக வந்தது மேலும் இரட்டிப்பு சந்தோஷத்தை தந்தது என்று பதிவிட்டுள்ளார். நிச்சயம் இந்த நிகழ்வை எங்களது வாழ்வில் எப்போதும் மறக்கவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மேற்கொள்ளும் அனைத்துமே ரசிக்கும் வகையில் தான் இருக்கும். அதிலும் சில பெண் குழந்தைகள் தாயை விட தந்தையைப்பார்த்தவுடன் விளையாடும் அனைத்துமே பார்ப்போரை நிச்சயம் கொள்ளைக்கொள்ளும். அப்படிப்பட்ட இந்த க்யூட்டான வீடியோவிற்கு தான் நெட்டிசன்கள் கமெண்ட்களைத் தெறிக்க விடுகின்றனர். குறிப்பாக, “குழந்தை என்றாலே அழகுதான், அப்பா பாசம் அளப்பெரியது, க்யூட் பேபி என்பது போன்ற பல கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)