Viral Video: கிச்சனில் பதுங்கிய சிங்கம்! 2 மணி நேரம் திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?
Lion: குஜராத்தின் அம்ரேலியில் உள்ள ஒரு வீட்டிற்குள் ஒரு சிங்கம் நுழைந்து, சமையலறை சுவரில் 2 மணி நேரம் அமர்ந்திருந்தத நிலையில் வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் சமையலறை சுவரின் மேல் சுமார் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்த சிங்கத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது
வீட்டுக்குள் நுழைந்த சிங்கம்:
குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் கோவயா கிராமத்தில் உள்ள முலுபாய் ராம்பாய் லகன்னோத்ராவின் வீட்டிற்குள் சிங்கம் எதிர்பாராத விதமாக ஊடுருவியது, தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை திடுக்கிட வைத்தது, அவர்கள் உடனடியாக ஓடிவந்து சக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். கூரையின் திறப்பு வழியாக சிங்கம் உள்ளே நுழைந்தது, குடும்பத்தினர் உடனடியாக ஓடிவந்து சக கிராம மக்களுக்கு தகவல் அளித்ததாக
சுவரில் அமர்ந்திருக்கும் சிங்கம், ஆர்வத்துடன் சமையலறைக்குள் எட்டிப் பார்க்கும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு கிராமவாசி தனது முகத்தில் டார்ச் லைட்டைப் பாய்ச்சும்போது, சிங்கம் சிறிது நேரம் கேமராவை நேராகப் பார்த்த நிலையில் அதன் கண்கள் இருளில் ஒளிர்ந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
2 மணி நேர போராட்டம்:
ராஜுலாவின் கோவயா கிராமத்தில் வீட்டிற்குள் நுழைந்த சிங்கம், அந்த கிராம மக்களிடைடே பீதியை ஏற்ப்படுத்தியது. அதன் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சிங்கம் அங்கிருந்து விரட்டப்பட்டது.
கிராம சந்தையில் சுமார் ஐந்து சிங்கங்கள் சுற்றித் திரிந்தாகவும் அவற்றில் ஒன்று அருகிலுள்ள காட்டில் இருந்து வழிதவறி குடியிருப்பு பகுதி வழியாகச் சென்று லக்னோத்ராவின் சமையலறைக்குள் நுழைந்திருக்கலாம் என்று தெரிகிறது.
Lion enters house in Rajula’s Kovaya village, sparks panic among residentshttps://t.co/MKEJoAfufZ pic.twitter.com/FoKfl8dC6o
— DeshGujarat (@DeshGujarat) April 2, 2025
அடிக்கடி நுழையும் சிங்கங்கள்
பிப்ரவரியில், குஜராத்தில் உள்ள பாவ்நகர்-சோம்நாத் நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக ஒரு ஆசிய சிங்கம் சாலையில் தோன்றியதால், போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது. இதனால் வாகனங்கள் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நின்றன. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலத்தைக் கடக்கும் போது, கார்கள், லாரிகள் மற்றும் பைக்குகள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஏப்ரல் 2024 இல், வடக்கு டெல்லியின் வஜிராபாத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் ஒரு சிறுத்தை நுழைந்து மூன்று பேரை காயப்படுத்தியது. 2016 ஆம் ஆண்டில் ஜகத்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்குள் ஒரு வயது சிறுத்தை சுற்றித் திரிந்தது. பல குடியிருப்பாளர்கள் கண்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வன அதிகாரிகள் இறுதியில் அந்த விலங்கைப் பிடித்து உத்தரகண்டில் உள்ள ராஜாஜி தேசிய பூங்காவிற்கு மாற்றினர்.






















