மேலும் அறிய

Lata Mangeshkar Health: லதா மங்கேஷ்கருக்காக பிரார்த்திக்கும் ரசிகர்கள்.. டாக்டர்கள் சொல்வது என்ன?

லதா மங்கேஷ்கர் கடந்த இரண்டு நாட்களாக திட உணவை உட்கொள்ள ஆரம்பித்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரிடம் கேட்கப்படும் விஷயங்களுக்கு பதிலளிக்கிறார்.

இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு நாடு முழுவதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தமிழில் வலையோசை கலகலவென உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். 

இந்தியாவின் நைட்டிங்கேல், இந்தியாவின் வாய்ஸ், இந்திய சினிமாவின் சிறந்த பாடகர்களில் ஒருவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர், 1942ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் தனது இசைப் பயணத்தை தொடங்கினார். 

இந்திய மொழிகள் பலவற்றிலும் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் பத்ம பூஷண், பாரத் ரத்னா, தாதா சாகேப் பால்கே என இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lata Mangeshkar Health: லதா மங்கேஷ்கருக்காக பிரார்த்திக்கும் ரசிகர்கள்.. டாக்டர்கள் சொல்வது என்ன?

இவர் தற்போது மும்பையில் வசித்துவருகிறார். இந்தச் சூழலில் லதா மங்கேஷ்கருக்கு  கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் என பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 92 வயதான லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் திடீர் திடீரென மாற்றம் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள், “லதா ஜி இன்னும் ஐசியுவில் இருக்கிறார், அவர் விரைவில் குணமடைவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். அவள் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என கூறியிருந்தனர்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கர் கடந்த இரண்டு நாட்களாக திட உணவை உட்கொள்ள ஆரம்பித்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரிடம் கேட்கப்படும் விஷயங்களுக்கு பதிலளிக்கிறார்.  அவர் வென்ட்டிலேட்டரில் இல்லை என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rajinikanth | ஒரு அவித்த முட்டை கேட்ட ரஜினி... அவமானப்படுத்திய சர்வர்... 17 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிக் கொடுத்த மாஸ் சம்பவம்!

Anjana Rangan Corona: அறிகுறியே தெரியல..ரொம்ப பயமா இருக்கு.. பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு கொரோனா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift : Vikravandi school child Death : சிறுமி உயிரிழந்தது எப்படி? நெஞ்சை நொறுக்கும் காட்சி  கதறும் தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
ZIM vs AFG: விறுவிறுப்பு! சீறும் ஜிம்பாப்வே! ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான் - ரசிகர்களுக்கு ட்ரீட்தான்
ZIM vs AFG: விறுவிறுப்பு! சீறும் ஜிம்பாப்வே! ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான் - ரசிகர்களுக்கு ட்ரீட்தான்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Embed widget