Watch video: புது வெள்ளை மழை.. லடாக்கில் கொட்டித்தீர்க்கும் பனி.. உறைந்து போன இடங்கள்..!
இதையடுத்து காஷ்மீர், டிசம்பர் மாதம் போல காட்சியளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், கட்டடங்களின் மேற்புரங்களில் பனி படர்ந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும். சில சமயங்களில் மழையும் பெய்யும். ஆனால் ஜம்மு காஷ்மீரில் ட்ராஸ், கார்கில் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தற்போதே பனிப்பொழிந்து வருகிறது.
Jammu and Kashmir | Pahalgam covered in first snow of the season pic.twitter.com/ygiT9UlOmj
— ANI (@ANI) October 23, 2021
இதனால் சாலைப் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.
அங்குள்ள சமவெளி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதையடுத்து காஷ்மீர், டிசம்பர் மாதம் போல காட்சியளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
குல்மர்க், பஹால்கம், சோபியன் ,குரேஸ் பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதேபோல புல்வாமா, குல்காம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது.
#WATCH | Ladakh: Various parts of Dras, Kargil district received fresh snowfall pic.twitter.com/5zvPfvxhxR
— ANI (@ANI) October 23, 2021
சரியான நேரத்தில் மரக்கிளைகள் வெட்டப்பட்டதன் காரணமாக பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய சூழல் நிலவவில்லை.
இன்னும் அடுத்த 24 மணி நேரத்துக்கு இதே வானிலை தான் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
இதையடுத்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் காஷ்மீர் பல்கலைகழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளின் காரணமாக ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்