மேலும் அறிய

கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?

Kolkata Durga Puja Stampede: கொல்கத்தாவில் புகழ்பெற்ற சோர்பாகன் துர்கா பூஜையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 19 உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தசரா பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சோர்பாகன் துர்கா பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பந்தலுக்கு வெளியே நின்றிருந்தவர்கள் மழையில் நனையாமல் இருக்க உள்ளே சென்ற பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வந்ததால் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

முதலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக அதிகரித்தது. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை அடுத்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி, முதல்வர்  சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும்  வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் முழு மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை இதுவரை 7 பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

விபத்து எப்படி நடந்தது?

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே விபத்து எப்படி நடந்தது தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிலர் விசில் அடித்து மக்களை விரட்டியதாகவும், இதன் காரணமாக அங்கு திரண்டிருந்த மக்கள் அனைவரும், பந்தலுக்குள் கூட்டமாக நுழைந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Ind US: ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?
ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
Driving License: ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
Embed widget