"முதல்ல கேஸ் ON பண்ணு" எல்கேஜி குழந்தைகளுக்கு டீ போட கற்று கொடுத்த சுட்டிபையன்.. செம க்யூட்
ஒரு குழந்தை, மற்ற குழந்தைகளுக்கு டீ எப்படி போட வேண்டும் என சொல்லி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எல்கேஜி படிக்கும் குழந்தைகள், தங்களின் பள்ளி முதல்வருக்காக டீ போடும் வீடியோ அனைவரின் மனதையும் வென்றுள்ளது. ஒரு குழந்தை, மற்ற குழந்தைகளுக்கு டீ எப்படி போட வேண்டும் என சொல்லி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளி முதல்வருக்கு டீ போட்டு கொடுத்த குழந்தைகள்:
ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் கோட்லி காலா பனா கிராமம் உள்ளது. இங்குதான், மாண்டிசோரி நர்கிஸ் தத் பப்ளிக் ஸ்கூல் இருக்கிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் குழந்தைகள், தங்களின் முதல்வருக்காகவும் தங்களுக்காகவும் டீ போட்டுள்ளனர். அந்த பள்ளியை சேர்ந்த அனில் சவுத்ரி என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இந்த சிறு கிளிப்பை பதிவேற்றியுள்ளார். குழந்தைகள் டீ போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மைக்ரோபோன் முன்பு குழந்தைகள் அனைவரும் நிற்கின்றனர். ஒரு குழந்தை, மற்ற குழந்தைகளுக்கு எப்படி டீ போட வேண்டும் என படிப்படியாக சொல்லி தருகிறது. டீ போட தேவையான பொருட்களான பானை, கோப்பைகள் மற்றும் ஒரு சிறிய எரிவாயு அடுப்பு ஆகியவை மேஜையில் வைக்கப்பட்டுள்ளன.
வைரலாகும் க்யூட் வீடியோ:
முதலில் டீ போட தெரியுமா என ஒரு குழந்தை மற்ற குழந்தைகளிடம் கேட்கிறது. அதற்கு ஒரு குழந்தை தெரியாது என பதில் அளிக்கிறது. நான் சொல்லி தருகிறேன் என கற்று கொடுக்க தொடங்கும் அந்த குழந்தை, " முதல்ல கேஸை ஆன் பண்ணு" என கூறுகிறது.
இதையடுத்து, டீ தயாரிக்கும் பணி தொடங்குகிறது. ஒவ்வொரு குழந்தையும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பானையில் ஒவ்வொரு மூலப்பொருளாகச் சேர்க்கின்றனர். தேநீர் தயாரானதும், மாணவர்கள் அதன் நறுமணத்தை நுகர்கின்றனர்.
View this post on Instagram
பின்னர் ஒரு குழந்தை, தேநீர் அருந்துவோம் என்று கூறுகிறது. இறுதியாக, மகிழ்ச்சியுடன் அவர்கள் தேநீரைப் பருகுவதுடன் காணொளி முடிகிறது. இந்த வீடியோவை லைக் செய்து பலர் பகிர்ந்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

