மேலும் அறிய

கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு

திருச்சூர் பூரம் பண்டிகைக்காக தலப்பள்ளி தாலுக்காவில் உள்ள முண்டத்திக்கோட்டில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு சேமிப்புக் கிடங்கில் இன்று(21-04-26) மதியம் திடீர் வெடி விபத்து ஏற்ப்பட்டது.

கேரளா மாநிலம் திருச்சூர் பூரத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் சிக்கி 13பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் பண்டிகைக்காக தலப்பள்ளி தாலுக்காவில் உள்ள முண்டத்திக்கோட்டில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு சேமிப்புக் கிடங்கில் இன்று(21-04-26) மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது. 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் மூன்று உடல்களின் அடையாளம் தெரியாத பாகங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காயமடைந்தவர்களில் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். திருச்சூர் பூரம் பண்டிகைக்காக அந்த கிடங்கில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட வந்தன. 

புகழ்பெற்ற திருவிழாவை ஏற்பாடு செய்யும் இரண்டு முக்கிய குழுக்களில் ஒன்றான திருவாம்பாடி தேவஸ்வத்திற்காக, அந்தப் பிரிவு பட்டாசுகளைத் தயாரித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்பு அதிகாரிகளும் ஆம்புலன்ஸ் குழுவினரும் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர்.


இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் "மாலை 3.35 மணியளவில் வெடிப்புச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பட்டாசு தயாரிக்கும் பிரிவு, அறுவடைக்குப் பிறகு காய்ந்திருந்த ஒரு நெல் வயலில் அமைந்திருந்தது. கடுமையான கோடை வெப்பம் இந்தச் சம்பவத்தை மேலும் மோசமாக்கியிருக்கலாம்," என்று வடக்கஞ்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "வடக்கஞ்சேரி, குன்னம்குளம் மற்றும் திருச்சூர் தீயணைப்புப் பிரிவுகள், உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தன," என்றும் அவர் மேலும் கூறினார்.

சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், திருச்சூர் மருத்துவக் கல்லூரி மட்டுமின்றி திருச்சூர் பொது மருத்துவமனையிலும் ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், அருகிலுள்ள மருத்துவமனைகள் நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

தீ பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேறு எந்த வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், இருப்பினும் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும் திருச்சூர் மாநகராட்சி மேயர் நிஜி ஜஸ்டின் தெரிவித்தார்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget