Sabarimala Temple : சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்...18-ஆம் படி வழியாக, நிமிடத்திற்கு இத்தனை பக்தர்கள் செல்லலாம்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sabarimala Temple : சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளுக்குநாள் அதிகரிக்கும் கூட்டம் :
சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஐயப்ப பக்தர்களை தரிசிக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மதியம் மற்றும் இரவு நேரங்களில் தரிசன நேரம் மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல், நெய்யபிஷேக நேரத்தையும் ஒன்றே முக்கால் மணிநேரம் அதிகரித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமையன்று முன்பதிவு மூலம் சுமார் 89, 966 பக்தர்கள் தரிசம் செய்தனர். தொடர்ந்து நேற்றைய நாளான புதன் பக்தர்கள் தரிசன எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டது. இதனால், பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு, உடனடியாக வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, பக்தர்கள் நீண்ட நேரம் கோயிலில் தங்குவதைத் தவிர்க்க தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வழக்கமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும், வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் உணவே, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்து. பக்தர்கள் பாதுகாப்பு கருதி முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சன்னிதானத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டால், பம்பா மற்றும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் ஒரு பக்கத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாரம்குத்தி ஆலத்தில் உள்ள வரிசை வளாகங்களை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெய்நிகர் வரிசை வழியாக தினசரி முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 90,000 ஆக நிர்ணயிக்கப்பட்டும் வருவதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
18-ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள்
சபரிமலையில் ஐயப்பனுக்கு நடைபெறும் மண்டல பூஜைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் இனி வரும் நாட்களில் கோயிலுக்கு கூடுதல் பக்தர்கள் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் வசதிகள் செய்ய கேரள அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் கோயிலுக்கு நாள்தோறும் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், சன்னிதானத்தில் உள்ள 18-ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 90,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க