மேலும் அறிய

உறவினரால் வயிற்றில் உருவான கரு.. சிறுமியின் நலம் முக்கியம்.! கலைக்க உத்தரவிட்ட கேரளா நீதிமன்றம்!

பாலியல் வன்கொடுமையால் 6 மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் 6 மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். ஒரு சில மாதங்களுக்கு பின்னரே சிறுமி கர்ப்பமானது பெற்றோருக்கு அந்த சிறுமிக்கும் தெரிய வந்தது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்தனர்.

இந்நிலையில், 6 மாத கர்ப்பிணியான அந்த சிறுமியின் பெற்றோர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், தங்கள் மகளின் உடல்நிலை மோசமாக இருப்பதால் கர்ப்பத்தை கலைக்கவேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவில், "சிறுமியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் உயிருடன் இருந்தால், குழந்தைக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை மருத்துவமனை உறுதி செய்யும். மனுதாரர் குழந்தையின் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்றால், மாநிலமும் அதன் அமைப்புகளும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு குழந்தைக்கு மருத்துவ உதவி மற்றும் வசதிகளை வழங்க வேண்டும் “ என்று உத்தரவிட்டார். 

சட்டம் சொல்வது என்ன..? 

1971 ஆம் ஆண்டின் மருத்துவக் கருவுறுதல் சட்டம், 24 வாரங்கள் ஆன கருவை கலைக்க நீதிமன்றங்கள் அனுமதிப்ப தில்லை. ஆனால், இந்த வழக்கில் சிறுமியின் உடல்நி லையை கருத்தில் கொண்டு கேரள உயர் நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget