மேலும் அறிய

Vismaya Dowry Case : நாட்டையே பதறவைத்த விஸ்மயா வழக்கு : கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு.. நாளை தண்டனை விவரம்

இது தனிமனிதருக்கு எதிரான தீர்ப்பு அல்ல, சமூக அநீதிக்கு எதிரான தீர்ப்பு. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

கேரளாவையே உலுக்கிய ஆயூர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா மர்ம மரண வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி அதிகாலையில் அவரது மாமியார் வீட்டில் மாணவி விஸ்மயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

செங்கொடி ஏந்திய பெண்களை முன்னத்தி ஏராகக் கொண்டு முற்போக்கு அரசாங்கத்தை நடத்திவரும் கேரளாவின் பினராயி விஜயன் ஆட்சியில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி இப்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆயூர்வேத மருத்துவத்துக்குப் படித்து வந்த 22 வயது விஸ்மயாவை அவரது குடும்பம் இரண்டு வருடத்துக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த கிரண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தது. தனது பெண் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக நூறு சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 9 லட்சத்துக்குக் கார் என வரதட்சணையை வாரி இறைத்திருக்கிறது குடும்பம். இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.  திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா. ஆனால் எப்படியோ சமாதானம் செய்து அவரைத் தன் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண். கிரண் அழைத்துச் சென்ற பிறகு தன் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் விஸ்மயா. அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்கிறது.

இதற்கிடையேதான் கிரண் தன்னை அடித்துத் துன்புறுத்திய புகைப்படங்களை தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கிறார் விஸ்மயா. வரதட்சணையாக அளித்த கார் வேண்டாம் அதற்கு பதிலாகப் பெற்றோரிடம் பணமாக வாங்கிவரும்படி விஸ்மயாவை வற்புறுத்தியிருக்கிறார் கிரண். முடியாது எனச் சொல்லவும் அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார். காரில் இந்தச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. விஸ்மயா காரை விட்டு வெளியேற முயற்சிசெய்ய அவரை முடியை பிடித்து இழுத்துக் கொடுமை செய்ததாகத் தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கும் வாட்சஅப் சாட்டில் சொல்லியிருக்கிறார். 

இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களில்தான் தனது கணவர் வீட்டில் பிணமாகக் கிடந்திருக்கிறார் விஸ்மயா. கொலையா தற்கொலையா என்கிற காரணம் தெரியவில்லை என்றாலும் இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது.

வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இது தனிமனிதருக்கு எதிரான தீர்ப்பு அல்ல, சமூக அநீதிக்கு எதிரான தீர்ப்பு. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget