Karnataka Maharashtra Border Disputes: கர்நாடக மகாராஷ்ட்ரா இடையே வலுக்கும் எல்லை பிரச்சனை.. 144 தடைவிதித்த காவல்துறையினர்..
நூற்றுக்கணக்கான Maharashtra Ekikaran Samiti அமைப்பினர் கொங்னோலி டோல் பிளாசா அருகே போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று நூற்றுக்கணக்கான Maharashtra Ekikaran Samiti மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர்கள் கொங்னோலி டோல் பிளாசா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லைக் கோட்டுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. மகாமேளாவை நடத்த அனுமதிக்காத கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து பெலகாவி அருகே தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
Belagavi, Karnataka | Members of Maharashtra Ekikaran Samiti and NCP stage protest near Kognoli Toll Plaza near Karnataka-Maharashtra border over inter-state border issue pic.twitter.com/XaPJwEbBKv
— ANI (@ANI) December 19, 2022
கர்நாடக மாநில எல்லையோரத்தில் பெலகாவி, பீதர், கார்வார் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் மராட்டிய பாரம்பரியத்தையே கடைபிடித்து வருகின்றனர்.
1960ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் மராத்தி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில பகுதிகள் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டதாக மகாராஷ்டிரா அரசு கூறி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக எல்லையோரம் இருக்கும் சில கிராமங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநில முதல்வரான பசவராஜ் பொம்மை உடனடியாக டெல்லிக்கு சென்று இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
Belagavi, Karnataka | Members of Maharashtra Ekikaran Samiti and NCP stage protest near Kognoli Toll Plaza near Karnataka-Maharashtra border over inter-state border issue; Section 144 is in place
— ANI (@ANI) December 19, 2022
Officers are on alert, in view of Maharashtra-Karnataka border issue, say police. pic.twitter.com/xnqYCWwDLV
தொடர்ந்து இரு மாநிலத்துக்குமான எல்லை பிரச்சணை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளில் பெலகாவியில் ஒவ்வொரு ஆண்டும் MES மாநாடு நடத்துவது வழக்கம். 50 ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனையை எழுப்பி வரும் எம்இஎஸ் அமைப்பினர் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு மாபெரும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையின் 10 நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மாவட்டத் தலைமையகமான பெலகாவியில் உள்ள திலகவாடியில் உள்ள தடுப்பூசிக் கிடங்கு மைதானத்தில் எம்இஎஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான எம்இஎஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கர்நாடக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பெலகாவியின் திலகவாடி சாலையில் பதட்டம் நிலவியது. சம்பந்தப்பட்ட பகுதியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடைசெய்யும் CrPc பிரிவு 144 தடையை காவல்துறை விதித்துள்ளது. தடை உத்தரவுகள் இருந்தால் கூட மகாராஷ்டிரா விகாஸ் அகாடி (எம்விஏ) தொழிலாளர்கள் பெலகாவி எல்லைக்குள் நுழைய முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.