Karnataka High Court: சடலத்துடன் உறவு கொள்வது குற்றமா..? தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்றம்...!
சடலத்துடன் உறவு கொண்டவரை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Karnataka Court : சடலத்துடன் உறவு கொண்டவரை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
10 ஆண்டு சிறை
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு 21 வயதான இளம்பெண் ஒருவரை கொலை செய்தார். கொலை செய்யப்பட்ட பின்பு, அந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு மேற்கொண்டுள்ளார். இந்த கொலை வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் இளம்பெண் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டு குற்றத்திற்காக ரங்கராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தடையும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ரங்கராஜ் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வீரப்பா, வெங்கடேஷ் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தீர்ப்பு
அதில், 21 வயதான இளம்பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக ரங்கராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்னையை உறுதி செய்தும், சடலத்துடன் உடலுறவு கொண்டு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டயை ரத்து செய்தும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் வீரப்பா, வெங்கடேஷ் நேற்று தீர்ப்பளித்தனர்.
இதற்கிடையில், நீதிபதிகள் கூறியதாவது, ”குற்றவாளி கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்துடன் உறவு கொண்டுள்ளார். சட்டப்படி இது குற்றமா...? இறந்த ஒரு உடல் மனிதராக, ஒரு நபராக கருத முடியாது. அதனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) கீழ் ஒரு குற்றத்திற்கு பொருந்தாது. அதனால் இறந்தவரின் சடலத்துடன் உடலுறவு கொண்டவரை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை.
மத்திய அரசுக்கு பரிந்துரை:
எனவே, இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய ஐபிசியின் 377வது பிரிவின் விதியை திருத்தம் செய்யவும் அல்லது புதிய சட்டத்தை கொண்ட வர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
எனவே, 21 வயதான இளம்பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக ரங்கராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்னையை உறுதி செய்தும், பிணத்துடன் உடலுறவு கொண்டு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டயை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.
மேலும் படிக்க
EPS: மேகதாது அணைக்கு எதிராக அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம் - கர்நாடக அரசுக்கு இ.பி.எஸ். எச்சரிக்கை