உயிரிழந்த மகன்.. உறுப்புகளை தானம் கொடுத்த பெற்றோர்.. பாராட்டிய அமைச்சர்..
சாலை விபத்தில் உயிரிழந்த தன் மகனின் உடல் உறுப்புகளை தானமளித்தப் பெற்றோரை கர்நாடக அமைச்சர் பாராட்டியுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த தன் மகனின் உடல் உறுப்புகளை தானமளித்தப் பெற்றோரை கர்நாடக அமைச்சர் பாராட்டியுள்ளார்.
இளைஞர் மரணம்; உறுப்புகள் தானம்:
கர்நாடக மாநிலம் தோட்டபல்லாபூரில் பேருந்து கீளீனர்காகப் பணியாற்றிவருபவர் நவீன் குமார். இவர் கடந்த வாரம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 3 நாள்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். நவீன் குமார் சிக்கபல்லாபூர், நந்தி ஹோப்ளிக்கு அருகே உள்ள பாலகுந்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இளைஞர் உயிரிழந்துவிடவே, அவரது உடல் வீணாகிவிடக்கூடாது; அவரால் மற்றவர்கள் வாழவேண்டும் என்று நினைத்த பெற்றோர் இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாகத் தர முன்வந்தனர். இதனையடுத்து நவீன் குமாரின் இதய வால்வுகள், கிட்னி, கல்லீரல் மற்றும் கண் ஆகியவை எடுக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்டது.
அமைச்சர் பாராட்டு:
இறந்த மகனின் உடல் உறுப்புகளை ஊனமுற்றோரின் மறுவாழ்வுக்காக தானமாகக் கொடுத்தப் பெற்றோரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே சுதாகர் பாராட்டியுள்ளார். இளைஞரின் இறப்பிற்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், அவர்களது செயலைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அமைச்சர் சுதாகர் “24 வயதான நவீன் குமார் சிக்கபல்லாபூர், அந்தி ஹோப்ளி, பாலகுந்தலஹள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர். இவர் தோட்டபல்லாபூரில் உள்ள ஒரு கல்லூரியில் பேருந்து க்ளீனராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், மூன்று நாள்களுக்குப் பிறகு உயிரிழ்ந்துவிட்டார். நவீன் பெற்றோரின் பரந்த உள்ளம் காரணமாக, உயிரிழந்த தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்பந்துள்ளனர். உண்மையாக இது முன்மாதிரியானது. நவீனின் கல்லீரல், கிட்னி, இதய வால்வுகள் மற்றும் கண் ரெட்டினா ஆகியவை- மற்றவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டு அவர்களுக்கு வாழ்வளிக்கும். விக்டோரியா மருத்துவமனையில் கடந்த 15 நாள்களில் நடைபெறும் இரண்டாவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாகும். மருத்துவக் குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
ಇದು ಕಳೆದ 15 ದಿನಗಳಲ್ಲಿ ವಿಕ್ಟೊರಿಯಾ ಆಸ್ಪತ್ರೆಯ ಟ್ರಾಮಾ ಕೇರ್ ವಿಭಾಗದಲ್ಲಿ ನಡೆದ ಎರಡನೇ ಅಂಗಾಂಗ ಕಸಿಯಾಗಿದ್ದು, ಈ ಕಾರ್ಯಾಚರಣೆಯಲ್ಲಿ ನಿರತರಾದ ಎಲ್ಲ ವೈದ್ಯರಿಗೆ ಹಾಗೂ
— Dr Sudhakar K (@mla_sudhakar) July 11, 2022
ಜೀವಸಾರ್ಥಕತೆ ತಂಡಕ್ಕೆ ಅಭಿನಂದನೆಗಳು.
3/3
தன் மகன் உயிரிழந்தாலும், தன் மகனால் நிறைய பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று எண்ணி தாராள மனதுடன் உறுப்பு தானம் செய்ய முன்வந்த பெற்றோரை பலரும் பாராட்டி வருவதோடு, அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.