Watch Video: தரமற்ற குக்கர் எதுக்கு? இந்தாங்க இதை வச்சிக்கோங்க” - குக்கர் விநியோகித்த பா.ஜ.க. நிர்வாகி
Watch Video : காங்கிரஸ் வழங்கிய குக்கர்களை தூக்கி வீசிவிட்டு பா.ஜ.க. நிர்வாகி புது குக்கர்களை வழங்கி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் மிக விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் மக்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் பரிசுப்பொருட்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் காங்கிரஸ் வழங்கிய குக்கர்களை தூக்கி வீசிவிட்டு அவர்கள் சார்பில் புது குக்கர்களை வழங்கியுள்ளார்.
Cooker Bomb —In order to ensure safety of women & children, we have handed over branded safe cookers in BTM constituency & we discarded low quality cookers distributed by MLA Ramalainga Reddy. His freebie politics would have costed lives of thousands of people in the constituency pic.twitter.com/QIMXNRIEcJ
— Anil Shetty (@iamanilshetty) February 23, 2023
குக்கர் வெடித்த சம்பவம்
பெங்களூரு சோமேஸ்வர காலனி பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக வாக்கு சேகரித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். அப்படி கொடுக்கப்பட்ட குக்கர் ஒன்று வெடித்து அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் சார்பில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட குக்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. தரப்பினர், காங்கிரஸ் தரமில்லாத குக்கர்களை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
பா.ஜ.க. நிர்வாகி குக்கர் விநியோகம்
குக்கர் வெடித்த சம்பவத்தையெடுத்து, பா.ஜ.க. தலைவர் அணில் ஷெட்டி குக்கர்களை தூக்கி எறிந்துவிட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு புதிய குக்கர்களை விநியோகிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதை அணி ஷெட்டியிம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். அதில், காங்கிரஸ் தரமற்ற குக்கரை வழங்கியுள்ளது . நாங்கள் அதை மாற்றி, தரமான குக்கர்களை வழங்கியுள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சி வழங்கிய குக்கர்களை ராமலிங்க ரெட்டியிடம் திருப்பி வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் அரசியலில் குக்கர் அரசியல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த காங்கிரஸ் அளித்த குக்கர்களை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.