65 வயதில் காதலியை கரம்பிடித்த காதலன்...35 ஆண்டுக்கு பிறகு லவ் சக்சஸ்... மேரேஜ் ஃபினீஷ்!
65 வயதில் திருமணம் செய்த ஜோடியை கண்டு அனைவரும் வியந்தனர். மாண்டியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
35 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் 65 வயது காதலியை காதலர் கரம்பிடித்த ருசிகர சம்பவம் கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது.
மைசூரை சேர்ந்த ஹெப்பாலின் சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் கடந்த 30 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இருவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. குடும்பக் காரணங்களால் அவர்களுக்கிடையில் காதல் பந்தம் உருவாகவே இல்லை. இந்த நிலையில், இந்த ஜோடி நேற்று திருமணம் செய்து கொண்டது. மேலும் படிக்க: Watch Video: புதிய பேட்டுகளுடன் மைதானம் வந்த கோலி... இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு!
ஜெயம்மாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மா 30 வயதில் இருக்கும்போதே விட்டுசென்று விட்டார். இதன்பிறகு, அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா ஜெயம்மாவை காதலித்து வந்தார். ஆனால், அவரின் காதலை ஜெயம்மா ஏற்கவில்லை. தனது காதலை ஏற்காததால் ஜெயம்மாவை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் சிக்கண்ணா. இந்த நிலையில், சிக்கண்ணாவின் காதலை ஏற்று, அவரை திருமணம் செய்ய சம்மதித்தார் ஜெயம்மா.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சாலுவராயசுவாமி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீனிவாஸ் குருஜியின் ஆசிரமத்தில் இந்த அபூர்வ ஜோடியின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 65 வயதுடைய சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் புது மணமக்களாக புது வஸ்திரம் உடுத்தி ஜொலித்தனர். இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மேலும் படிக்க: Cyclone Jawad: 12 மணி நேரத்தில் ஜாவத் புயல்... டிசம்பர் 2வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!
இந்த திருமணம் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, காதலர்கள் திருமணத்தில் இணைந்தனர். 30 வயது காதல், குறையும் வயதில் நிறைவேறியது. மாண்டியா மாவட்டத்தின் மேல் கோட்டையைச் சேர்ந்தவர்கள் இந்த அபூர்வ திருமண விழாவை கண்டுகளித்தனர். புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ அந்த ஊர் மக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் படிக்க: Marakkar Review: 3 மணி நேரம்... அமர்ந்து பார்க்கும் படியான படமா மரைக்காயர்? அலசி ஆராயும் நச் விமர்சனம்!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்