Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Indis MPs Team Against PAK: பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளை உலகறிய செய்ய, இந்திய அரசு அமைத்த 59 எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் 33 நாடுகளுக்கு பயணிக்க உள்ளன.

Indis MPs Team Against PAK: திமுக எம்.பி., கனிமொழியின் குழு ரஷ்யாவிற்கும், காங்கிரஸ் எம்.பி., சசிதரூரின் குழு அமெரிக்காவிற்கும் பயணிக்க உள்ளன.
மத்திய அரசின் எம்.பிக்கள் குழு:
அனைத்துக் கட்சி எம்.பிக்களை உள்ளடக்கி மத்திய அரசு அமைத்துள்ள 7 குழுக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து தீவிரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக நமது ராணுவம் முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த இந்திய அரசின் கருத்துகளை பரப்புரை செய்ய உள்ளன. ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து 31 பேர், மற்ற கட்சிகளில் இருந்து 20 பேர் என மொத்தம், 7 குழுக்களில் 59 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
குழுக்களின் தலைவர்கள்:
அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழுக்களானது பாஜகவைச் சேர்ந்த பைஜெயந்த் ஜெய் பாண்டா, ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சஞ்சய் ஜா, சிவசேனா கட்சியை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, திமுகவை சேர்ந்த கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே ஆகியோரால் வழிநடத்தப்பட உள்ளன. இந்த குழுக்களானது 32 நாடுகள் மற்றும் பெல்ஜியமில் உள்ள ஐரோப்பா யூனியன் தலைமையகம் ஆகிய இடங்களுக்கு பயணிக்க உள்ளன. இவர்களின் சுற்றுப்பயணமானது வரும் மே 23ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.
குழுக்களும், பயணிக்கும் நாடுகளும்..
குழு 1: சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா நாடுகளுக்கு பயணிக்கும்
- பைஜெயந்த் பாண்டா, பாஜக எம்பி
- நிஷிகாந்த் துபே , பாஜக எம்பி
- ஃபாங்னான் கொன்யாக், பாஜக எம்பி
- ரேகா ஷர்மா, பாஜக எம்பி
- அசாதுதீன் ஓவைசி, ஏஐஎம்ஐஎம் எம்பி
- சத்னம் சிங் சந்து, நியமன எம்பி
- குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர்
- தூதர் ஹர்ஷ் சிங்லா
குழு 2: இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க்
- ரவிசங்கர் பிரசாத், பாஜக எம்பி
- டகுபதி புரந்தேஸ்வரி, பாஜக எம்பி
- பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா (யுபிடி)
- குலாம் அலி கட்டானா, நியமன எம்பி
- அமர் சிங், காங்கிரஸ் எம்பி
- சாமிக் பட்டாச்சார்யா, பாஜக எம்பி
- எம்ஜே அக்பர், முன்னாள் மத்திய அமைச்சர்
- தூதர் பங்கஜ் சரண்
குழு 3: இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர்
- சஞ்சய் குமார் ஜா, ஜேடியு எம்பி
- அபராஜிதா சாரங்கி, பாஜக எம்பி
- யூசுப் பதான், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி
- பிரிஜ் லால், பாஜக எம்பி
- ஜான் பிரிட்டாஸ், சிபிஐ (எம்) எம்பி
- பிரதான் பருவா, பாஜக எம்பி
- ஹேமங் ஜோஷி, பாஜக எம்பி
- சல்மான் குர்ஷித், காங்கிரஸ்
- தூதர் மோகன் குமார்
குழு 4: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ, சியரா லியோன்
- ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்பி
- பன்சூரி ஸ்வராஜ், பாஜக எம்பி
- முகமது பஷீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) எம்பி
- அதுல் கர்க், பாஜக எம்பி
- சஸ்மித் பத்ரா, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்பி
- மனன் குமார் மிஸ்ரா, பாஜக எம்பி
- எஸ்எஸ் அலுவாலியா, முன்னாள் பாஜக எம்பி
- தூதர் சுஜன் சினாய்.
குழு 5: அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா
- சசி தரூர் , காங்கிரஸ் எம்பி
- சாம்பவி, எல்ஜேபி (ராம் விலாஸ்) எம்பி
- சர்பராஸ் அகமது, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) எம்பி
- ஜிஎம் ஹரிஷ் பாலயோகி, தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) எம்பி
- ஷஷாங்க் மணி திரிபாதி, பாஜக எம்பி
- புவனேஸ்வர் சிங் கலிதா, பாஜக எம்பி
- மிலிந்த் முரளி தியோரா, பாஜக எம்பி
- தேஜஸ்வி சூர்யா, பாஜக எம்பி
- தூதர் தரன்ஜித் சிங் சந்து
குழு 6: ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா
- கனிமொழி கருணாநிதி, திமுக எம்பி
- ராஜீவ் ராய், சமாஜ்வாதி கட்சி எம்பி
- மியான் அல்தாப் அகமது, தேசிய மாநாடு கட்சி எம்பி
- பிரிஜேஷ் சௌதா, பாஜக எம்பி
- பிரேம் சந்த் குப்தா, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்பி
- அசோக் குமார் மிட்டல், ஆம் ஆத்மி
- தூதர் மஞ்சீவ் எஸ் பூரி
- தூதர் ஜாவத் அஷ்ரஃப்
குழு 7: எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா
- சுப்ரியா சுலே எம்பி, என்சிபி (எஸ்சிபி) எம்பி
- ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக எம்பி
- விக்ரம்ஜீத் சிங் சாஹ்னி, ஆம் ஆத்மி எம்பி
- மணீஷ் திவாரி, காங்கிரஸ் எம்பி
- அனுராக் சிங் தாக்கூர், பாஜக எம்பி
- லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, டிடிபி எம்பி
- ஆனந்த் சர்மா, காங்கிரஸ்
- வி முரளீதரன், பாஜக
- தூதர் சையத் அக்பருதீன்
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலில், பாகிஸ்தானிற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 7ம் தேதியன்று ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி தந்தது. தீவிரவாத முகாம்கள் மீதான இந்த தாக்குதலில் பல முக்கிய தீவிரவாத தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்களின் மீது, பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. ஆனால், அவை அனைத்துமே இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் சூழல் வெடித்த நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.





















