மேலும் அறிய

Congress Interim President: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகிறார் கமல்நாத்?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குப் பின், கட்சியின் நிரந்தரத் தலைவர் பதிவிக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கமல்நாத் நியமிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்குப் பின், கட்சியின் நிரந்தரத் தலைவர் பதிவிக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.       

இதுதொடர்பாக, டெல்லியில் கட்சியின் தற்போதைய இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் கமல்நாத் இடையே சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு பிறகு பதவி விலகினார். அதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். இந்நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிக்கொடுத்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் கெலாட்- சச்சின் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் அதன் இருத்தலையே கேள்வி கேட்பதாக அமைந்தது. 

Congress Interim President: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகிறார் கமல்நாத்?

இந்நிலையில், கட்சிக்குள் அடிப்படை சீர்த்திருத்தம் வேண்டி 23 மூத்த தலைவர்கள் கடந்த ஆண்டு கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அதுவும் கொரோனா முதலாவது பெருந்தொற்று நாட்களில் காங்கிரஸ் கட்சி தனது நம்பகத்தன்மையை மீட்டுக் கொண்டிருந்த வேளையிலும், ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு மிகுந்த நேரத்திலும் இக்கடிதம் வெளியாகி இருந்தது.          

அதிருப்தி நடவடிக்கையா (அ) கட்சியை வலுப்படுத்தும் முயற்சியா? என்று பிரித்து பார்க்க முடியாத வகையில் ஆனந்த சர்மா, வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்றத் தலைவர்களின் செயல்பாடுகள் இருந்து வந்தது. அதிலும், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் ஓய்வு பொதுக் கூட்ட விழாவில் இந்த அதிருப்தி போக்கு காணப்பட்டது. ஆசாத் போன்ற ஒரு திறன்மிகுந்த தலைவரை காங்கிரஸ் தலைமை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அதிருப்தி தலைவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது, பேசிய குலாம் நபி ஆசாத், " பாரத பிரதமர் நரேந்திர மோடி என்றுமே தனது சுயத்தை மறைக்காதவர், வெளிப்படையானவர்" என்று புகழாரம் சூட்டினார்.         

கட்சி சீர்திருத்தம் தொடர்பாக சில தலைவர்கள் அனுப்பிய கடிதம், பொதுவெளியில் கசிந்தது தம்மை மிகவும்  காயப்படுத்தியதாக தலைவர் சோனியா காந்தி வெளிப்படையாகவே தெரிவித்தார். மேலும், கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்தவுடன் காங்கிரஸ் தலைவர் பதிவுக்கு கட்டாயம் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.   

Congress Interim President: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகிறார் கமல்நாத்?    

இந்நிலையில், நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அடுத்த குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் சரத் பவாரை முன்மொழிவது குறித்து பேசப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இது இருக்கலாம் எனவும் பார்க்கப்பட்டது. பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு அடுத்த நாளே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் பதவிக்கு கமல்நாத் நியமிக்கப்படுவதும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.         

மேலும், வாசிக்க: 

Sharad pawar | குடியரசுத்தலைவர் போட்டியில் நானா? சரத் பவார்  கேள்வி..!

காங்கிரசில் சேரும் பிரசாந்த் கிஷோர்.. பின்னணியில் ராகுல் பிரியங்கா 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Embed widget