மேலும் அறிய

Morning Wrap : 22.06.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
  • தமிழகத்தில் நிதிநிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து வரும் ஜூலையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகியோரை கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று ஆளுநர் உரையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா 3வது அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில்வரியை செலுத்த 3 மாத காலம் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்க 50 கோடி ரூபாய், 3வது அலை முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலைத் திட்ட பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
  • விடுபட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
  • புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 15 நாளில் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும்.
  • மாநில உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பு துணையோடு கடுமையாக எதிர்ப்போம், மாநில அரசின் மூலமாகவே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்க முடியும்.
  • கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை கட்டும் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும்.
  • ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், மக்களின் அரசாக அனைவருக்குமான அரசாக தமிழக அரசு இருக்கும்.
  • மாநிலத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடைய்யின்றி மின்சாரம் வழங்குவதே அரசின் இலக்கு
  • சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு அதீத முக்கியத்துவம் கொடுக்கும்.
  • முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய்01 கோடி நிதி வந்துள்ளது.
  • தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக பயன்படுத்த அரசியல் சட்டத்தில் 343வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும்.
  • மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் மீதான புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உரிய அதிகாரம் அளிக்கப்படும்.
  • ஊழல் தடுப்பு விழிப்பு பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் விசாரிக்கப்படும்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமுன்வடிவை கொண்டு வந்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவோம்.
  • நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.
  • தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான சட்டங்கள் இயற்றப்படும்.
  • நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய சட்டமுன்வடிவுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
  • மேற்கண்ட அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் உரையில் வெளியானது.
  • தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 7,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
  • தமிழ்நாட்டில் ஊரடங்கின் புதிய விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
  • சென்னையில் பேருந்து சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டது.
  • இந்தியா நியூசிலாந்து இடையேயான நேற்றைய நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.
  • இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 83 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs KKR LIVE Score: டாப் ஆர்டரை சிதைக்க கொல்கத்தா தீவிரம்; விக்கெட்டுகள் சரிந்தாலும் விராட் கோலி அதிரடி ஆட்டம்!
RCB vs KKR LIVE Score: டாப் ஆர்டரை சிதைக்க கொல்கத்தா தீவிரம்; விக்கெட்டுகள் சரிந்தாலும் விராட் கோலி அதிரடி ஆட்டம்!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | வேட்புமனு தாக்கல் விவகாரம்’’அ.மலையின் ப்ளான் இதுதான்’’ செல்வப்பெருந்தகை விளாசல்Durai Vaiko Trichy DMK | ”வேலை பார்க்க மாட்டோம்” துரை வைகோவுக்கு போர்க்கொடி! திருச்சி திமுக பூகம்பம்Kanimozhi Pressmeet | ’’கனவு காண்பது அவர் உரிமை’’அ.மலையை கலாய்த்த கனிமொழி..60% வாக்குகள்Sowmiya anbumani speech | ”நான் உங்க வீட்டு பொண்ணு” பிரச்சாரத்தில் கலக்கும் சௌமியா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs KKR LIVE Score: டாப் ஆர்டரை சிதைக்க கொல்கத்தா தீவிரம்; விக்கெட்டுகள் சரிந்தாலும் விராட் கோலி அதிரடி ஆட்டம்!
RCB vs KKR LIVE Score: டாப் ஆர்டரை சிதைக்க கொல்கத்தா தீவிரம்; விக்கெட்டுகள் சரிந்தாலும் விராட் கோலி அதிரடி ஆட்டம்!
CM Stalin:
"சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Embed widget