கொடூரத்தின் உச்சம்.. உறவினரின் தலையை வெட்டிக் கொலை... செல்பி எடுத்த நண்பர்கள்...!
ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக பழங்குடியினத்தை சேர்ந்த 20 வயது நபர் ஒருவர், அவருடைய 24 வயது உறவினரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
குற்றச் செயல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக கொலை செய்யப்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக பழங்குடியினத்தை சேர்ந்த 20 வயது நபர் ஒருவர், அவருடைய 24 வயது உறவினரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவரின் நண்பர்கள், வெட்டப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அண்மையில் முர்கு பகுதியில் நடந்துள்ளது. இறந்தவரின் தந்தை தசாய் முண்டா டிசம்பர் 2 ஆம் தேதி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பிரதான குற்றவாளி மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
55 வயதான தனது மகன் கனு முண்டா டிசம்பர் 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்ததாகவும், மற்றவர்கள் வேலைக்காக நெல் வயல்களுக்குச் சென்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தசாய் முண்டா கூறியுள்ளார்.
மாலையில் வீடு திரும்பிய பிறகு, கிராம மக்கள் தன்னிடம், அவரது மருமகன் சாகர் முண்டா மற்றும் அவரது நண்பர்கள் அவரது மகனைக் கடத்திச் சென்றதாகக் கூறினர். கனுவைக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவரது தந்தை மறுநாள் முதல் தகவல் அறிக்தையை பதிவு செய்துள்ளார்.
குற்றவாளிகளைப் பிடிக்க குந்தி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி அமித்குமார் தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்பட்டது.
இதுகுறித்து முர்ஹு காவல் நிலைய பொறுப்பதிகாரி சுடாமணி துடு கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குமாங் கோப்லா காட்டில் உடல் மற்றும் தலை 15 கிமீ தொலைவில் துல்வா துங்ரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
#Jharkhand: Man Beheads Cousin, Friends Takes Selfie With Severed Headhttps://t.co/cajRR5j7hs
— ABP LIVE (@abplive) December 5, 2022
துண்டிக்கப்பட்ட தலையுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்பி எடுத்துள்ளனர். இறந்தவரின் கைத்தொலைபேசிகள் உள்பட 5 கைத்தொலைபேசிகள், இரத்தக்கறை படிந்த இரண்டு கூரிய ஆயுதங்கள், ஒரு கோடாரி மற்றும் எஸ்யூவி வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு நிலம் தொடர்பாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பகையே தலை துண்டிக்கப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது" என்றார்.
சமீபத்தில், பயங்கரவாதம், குற்றச்செயல்கள் காரணமாக இந்தியா செல்பவர்கள் அதிக கவனமுடன் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி இருக்கிறது.
சுற்றுலா, தொழில் உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வரும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.