Vice President Election 2022 : குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர்...!
குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்று கொண்டார்.
இந்தியாவில் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற ஜெகதீப் தன்கருக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
WATCH | उपराष्ट्रपति के शपथग्रहण समारोह में पहुंचीं राष्ट्रपति मुर्मू, पीएम मोदी भी मौजूद@vikasbhahttps://t.co/smwhXUROiK#VicePresident #JagdeepDhankar #DroupadiMurmu #NarendraModi pic.twitter.com/JO8DFflxxk
— ABP News (@ABPNews) August 11, 2022
யார் இந்த ஜெகதீப் தன்கர்..?
புதியதாக குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுள்ள 71 வயதான ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பு முடித்த இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். எம்.பி.யாக பணியாற்றிய இவர் மேற்கு வங்க ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
ஜெயதீப் தன்கர் கடந்த 1989 ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சந்திரசேகர் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார். கடந்த 2019 ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்புhttps://t.co/wupaoCQKa2 | #jagadeepdhankar #VicePresidentofIndia pic.twitter.com/bBD3CpPDBL
— ABP Nadu (@abpnadu) August 11, 2022
குடியரசுத் துணைத் தலைவர் :
நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் மற்றும் புதிய குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வாகியிருந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 6 ம் தேதி நடைபெற்றது. இதில், ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், மார்க்ரெட் ஆல்வாவும் 182 வாக்குகளும் பெற்றனர். 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ஜெகதீப் தன்கர் அபார வெற்றி பெற்றார். மார்க்ரெட் ஆல்வா 25.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜெகதீப் தன்கர் 72.8 சதவீத வாக்குகள் பெற்றார். 15 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 2.1 சதவீத வாக்குகள் செல்லாதவை.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கருக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என்ற நிலையில், அவர் 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளரான மார்க்ரெட் ஆல்வாவிற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள், தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வாக்களித்தன. இந்த தேர்தலில், வாக்களிக்கத் தகுதியான 780 நபர்களில் 725 நபர்கள் வாக்களித்தனர். அதாவது, 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற தன்கருக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்