மேலும் அறிய

IRCTC Offers: அதிரடி சலுகை அறிவித்த ஐ.ஆர்.சி.டி.சி - விமான டிக்கெட்டிற்கு ரூ. 2000 வரை ஆஃபர், சேவை கட்டணமும் கிடையாது

IRCTC Offers : விமான டிக்கெட்டுகளுக்கான இந்த சிறப்புச் சலுகை 3 நாட்களுக்கு (செப்டம்பர் 27 வரை ) மட்டுமே இருக்கும், என ஐ.ஆர்.சி.டி.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC Offers: ஐ,ஆர்.சி.டி,சி., இணையதளம் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி,சி. சலுகை அறிவிப்பு:

வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று உலக சுற்றுலா தினத்துடன், ஐ.ஆர்.சி.டி.சி தோற்றுவிக்கப்பட்டதன்  24வது நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.  இதனை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு தாராளமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ”மூன்று நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 25 முதல் 27 வரை, IRCTC தனது இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குறையுமா மின்கட்டணம்; போராட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள்: அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை!

பண்டிகை கால சலுகை:

இந்த சிறப்பு சலுகை குறிப்பிட்ட காலத்தில் பயணிகளுக்கு செலவு-சேமிப்பு வாய்ப்பை வழங்கும் என ஐ.ஆர்.சி.டி.சி., நம்பிக்கை தெரிவித்துள்ளது.  சேவை கட்டணங்களை நீக்குவதுடன், ஐஆர்சிடிசி பல்வேறு வங்கி அட்டை பரிவர்த்தனை தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தி, விமான டிக்கெட்டுகளில் ரூ.2000 வரை சேமிப்பை வழங்குகிறது. இந்த கவர்ச்சிகரமான சலுகைகள் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு உதவிரகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.  தங்களது விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை 100 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ள பயனாளிகள்,  IRCTC வழங்கும் இந்த சிறப்பு தள்ளுபடி மூலம் பயனடையலாம். 

பாதுகாப்பு அம்சங்கள்:

IRCTC ஆனது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை அதிக போட்டி விலையில் முன்பதிவு செய்வதற்கு வசதியாக IATA- சான்றளிக்கப்பட்ட இணையதளத்தை (www.air.irctc.co.in) நிறுவியுள்ளது. இந்த தளம் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் விரும்பிய இருக்கை வசதிகளை தேர்வு செய்து கொள்ளும் வகையிலான ஆப்ஷனைகளை வழங்குகின்றது. ஐஆர்சிடிசியின் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்யப்படும் ஒவ்வொரு விமான டிக்கெட்டும், ரூ.50 லட்சம் பயணக் காப்பீட்டுத் தொகையுடன் வருகிறது. இது முன்பதிவு செயல்முறைக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கிறது.

இதையும் படிங்க: Stock Market Update: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை வீழ்ச்சி!

ரயில்வேதுறை:

இந்தியர்களின் பயணத்தில் ரயில்சேவை என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. அதனை மேலும் மேம்படுத்தும் விதமாக தான், ஐ.ஆர்.சி.டி.சி சேவை தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மற்றும் செயலி மூலம், சுற்றுலா மற்றும் பயண திட்டங்களுக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. ரயில்களுக்கான டிக்கெட் மட்டுமின்றி, விமானங்களுக்கான டிக்கெட்டுகளையும் விற்று வழங்கி வருகிறது. அந்த சேவைகளுக்கான கட்டணத்தையும் வசூலித்து வருகிறது. இந்நிலையில் தான், உலக சுற்றுலா தினம் மற்றும்  ஐ.ஆர்.சி.டி.சி. தோற்றுவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, விமான டிக்கெட் முன்பதிவிற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 10th Result 2024: இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  - உங்களது ரிசல்டை அறிவது எப்படி?
உங்களது ரிசல்டை அறிவது எப்படி? இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை
CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை
Akshaya Tritiya 2024: அட்சய திரிதியை நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.360 உயர்வு
அட்சய திரிதியை நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.360 உயர்வு
Today Rasipalan: துலாமுக்கு விவேகம்.. விருச்சிகத்துக்கு வரவு: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
துலாமுக்கு விவேகம்.. விருச்சிகத்துக்கு வரவு: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Narayanan Thirupathy on Savukku : ”சவுக்கு தாக்கப்பட்டாரா? ஏத்துக்க முடியாது” நாராயணன் திருப்பதிsanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th Result 2024: இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  - உங்களது ரிசல்டை அறிவது எப்படி?
உங்களது ரிசல்டை அறிவது எப்படி? இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை
CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை
Akshaya Tritiya 2024: அட்சய திரிதியை நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.360 உயர்வு
அட்சய திரிதியை நாளில் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.360 உயர்வு
Today Rasipalan: துலாமுக்கு விவேகம்.. விருச்சிகத்துக்கு வரவு: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
துலாமுக்கு விவேகம்.. விருச்சிகத்துக்கு வரவு: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Today Movies in TV, May 10: ஆக்‌ஷன் பேக்கேஜ் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்னென்ன?
ஆக்‌ஷன் பேக்கேஜ் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்னென்ன?
RCB vs PBKS Match Highlights: 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
RCB vs PBKS Match Highlights: 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB; ப்ளேஆஃப் வாய்ப்பினை இழந்த பஞ்சாப்!
Fact Check : இந்துக்களின் அலமாரியை உடைத்து இஸ்லாமியர்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே? உண்மை என்ன?
இந்துக்களின் அலமாரியை உடைத்து இஸ்லாமியர்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே? உண்மை என்ன?
Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா
Embed widget