மேலும் அறிய

Indian Stock Index Climb: ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...

நீண்ட வார இறுதிக்குப்பின் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள், ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீண்டு உயர்வுடன் வர்த்தகமாகின.

3 நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரியால் ஏற்பட்ட இழப்புகளை சமாளித்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.

ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரியால் பாதித்த பங்குச்சந்தைகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்த நிலையில், நண்பனான இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 26 சதவீத வரியை விதிப்பதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார் ட்ரம்ப். இதையடுத்து, பல்வேறு நாடுகளைப் போலவே, இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. எனினும், தற்போது வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.

விடுமுறைக்குப்பின் இன்று உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்

இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான NSE நிஃப்டி 50 2.4% அளவிற்கு உயர்வுடன் வர்த்தகமானது. அதன்படி, இன்று காலை சென்செக்ஸ் சுமார் 1,576 புள்ளிகள் உயர்ந்து சுமார் 76,733 புள்ளிகளுடன் வர்த்தகமானது. இதேபோல், நிஃப்டி சுமார் 470 புள்ளிகள் உயர்ந்து 23,298 புள்ளிகளில் வர்த்தகமானது. இது, வரி விதிப்பு அறிவிப்பிற்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 2-ம் தேதி இருந்த வர்த்தகத்தக அளவை ஒட்டி இருந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பரஸ்பர வரிகளால் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் இந்திய வர்த்தக சந்தைகளை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான புகலிடமாக கருதுகின்றனர். இந்தியாவின் பெரிய அளவிலான உள்நாட்டு பொருளாதாரம், உலகளாவிய பொருளாதார மந்தநிலையை சமாளிக்கும் திறனை கொண்டுள்ளது. பெரிய அளவு வரிகளை எதிர்கொள்ளும் அண்டை நாடுகளைவிட இந்தியா இந்த நெருக்கடியை சிறப்பாகவே கையாண்டுள்ளது.

சிறந்த உள்நாட்டு வளர்ச்சி, சீனாவை தவிர பிற பகுதிகளிலும் விரிந்துள்ள விநியோகம் போன்ற தொகுப்புகளால் இந்தியா மிகவும் வலிமைவாய்ந்ததாக இருப்பதால், இந்திய பங்குகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுவதாக, தி குளோபல் சிஐஓ அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரி கேரி துகன் தெரிவித்துள்ளார்.

தீவிரமடைந்துவரும் சீன-அமெரிக்க வர்த்தகப் போரால், சீனாவிற்கு மாற்று உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அமெரிக்காவிற்கு சீனா எதிர்வரி விதித்து பகையை வளர்த்துவரும் நிலையில், இந்தியா, அமெரிக்காவுடன் சமசரசம் செய்து, ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து தற்காலிக வர்த்தக ஒப்பந்தங்களை பெற முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget