மேலும் அறிய

Indian Passport: இந்தியாவில் எத்தனை வகையான பாஸ்போர்ட் இருக்கு தெரியுமா? நாட்டின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் யாருக்கு?

Indian Passport: இந்தியாவில் எத்தனை வகையான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Indian Passport:  இந்தியாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்களில், விஐபி பாஸ்போர்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்திய பாஸ்போர்ட்கள்:

உலகின் எந்த நாட்டிற்கும் செல்ல, பாஸ்போர்ட் வைத்திருப்பது மிக முக்கியம். சில நாடுகளில் அங்கு தரையிறங்கியதுமே கூட விசா பெறும் வசதி உள்ளது, ஆனால் பயணம் செய்ய பாஸ்போர்ட் அவசியம். அந்த வகையில் இந்தியாவில் எத்தனை வகையான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன என்று தெரியுமா? யாருக்கு எந்த பாஸ்போர்ட்கள் ஒதுக்கப்படு என தெரியுமா?  அதற்கு பதில், இந்திய அரசு மொத்தம் 4 வகையான பாஸ்போர்ட்களை விநியோகிக்கிறது. அதன்படி நீல பாஸ்போர்ட்,  ஆரஞ்சு பாஸ்போர்ட், வெள்ளை பாஸ்போர்ட் மற்றும் தூதரக பாஸ்போர்ட் ஆகியவை விநியோகிக்கப்படுகிறது. 

நீல நிற பாஸ்போர்ட்:

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான பாஸ்போர்ட் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. வெளியுறவு அமைச்சகம் சாதாரண குடிமக்களுக்கு தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைகளுக்காக நீல நிற பாஸ்போர்ட்களை வழங்குகிறது.

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்

10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய குடிமக்களுக்கு ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பாஸ்போர்ட் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை செய்ய வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது.

வெள்ளை நிற பாஸ்போர்ட்:

உத்தியோகபூர்வ வேலைக்காக வெளிநாடு செல்லும் அதிகாரிகளுக்கு இந்திய அரசு வெள்ளை பாஸ்போர்ட்டை வழங்குகிறது. வெள்ளை நிற பாஸ்போர்ட் வைத்திருப்பதால், எந்த நாட்டிலும் சுங்கச் சோதனையின்போது அரசு அதிகாரிகளைப் போலவே நடத்தப்படுவார்கள். அதேசமயம் வெள்ளை நிற பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பதாரர் தனி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் அவருக்கு ஏன் இந்த பாஸ்போர்ட் தேவை என்று சொல்ல வேண்டும். வெள்ளை நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், பல சிறப்பு வசதிகளைப் பெறுவார்கள்.

ராஜாங்க பாஸ்போர்ட்:

உயர்மட்ட அரசு அதிகாரிகள், தூதர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளுக்கு ராஜாங்க பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன. நாட்டில் மொத்தம் ஐந்து வகை மக்களுக்கு இத்தகைய பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அதன்படி ராஜாங்க அந்தஸ்து பெற்றவர்கள், அரசு வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள், வெளிநாட்டு சேவையின் (IFS) A மற்றும் B குரூப் அதிகாரிகள்,  வெளியுறவு அமைச்சகம் மற்றும் IFS பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசாங்கம் சார்பில் உத்தியோகபூர்வ பயணம் செய்யும் அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்படும்.

 ராஜாங்க பாஸ்போர்ட்டின் நன்மைகள்?

ராஜாங்க பாஸ்போர்ட் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக கருதப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பெரும்பாலான நாடுகளில் விசா தேவையில்லை. சில நாடுகளில் விசா அவசியமாக இருந்தாலும், சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் விசா கிடைக்கும். ராஜாங்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இது தவிர ராஜாங்க பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஒருவரை வெளிநாட்டில் கைது செய்ய முடியாது. அத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய தூதரகம் அல்லது தூதரகத்தை அணுகலாம். அதேசமயம் வெளிநாடுகளில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அல்லது நிலைமை மோசமடைந்தால். அந்த நிலையில் மீட்பு நடவடிக்கைகளின் போது ராஜாங்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர் முதலில் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Breaking News LIVE 18th NOV 2024: ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
Breaking News LIVE 18th NOV 2024: ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்
Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Embed widget