மேலும் அறிய

Agnipath Scheme: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 273 பெண்கள் உட்பட 2,585 வீரர்கள் தேர்ச்சி

இந்திய பாதுகாப்புத்துறையில் அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 2,585 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் 273 பெண்களும் அடங்குவர்.

இந்திய பாதுகாப்புத்துறையில் அக்னிபாத் திட்டத்தில் முதற்கட்டமாக 2,585 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் 273 பெண்களும் அடங்குவர். 

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு தொடர்பாக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. அக்னிபாத் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 46 ஆயிரம் இளைஞர்களை  ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பணியாற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெறும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 4 ஆண்டுகள் பணியாற்றும் வீரர்களில் 25% மட்டுமே நிரந்தரமாக பணி புரிய வாய்ப்பு பெறுவார்கள் என்பதால் பல மாநிலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைய 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4 வருட பணிக்கு 6 மாதம் மட்டுமே பயிற்சியும் வழங்கப்படும். இப்படியான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பெண்களும் அக்னிவீரர்கள் ஆக முடியும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது. பாதுகாப்புத் துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. 4 வருட பணிக்குப் பிறகு அக்னிபாத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடைக்காது என ஏகப்பட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2,585 அக்னி வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் விரைவில் முப்படைகளிலும் இணைக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்திய கடற்படையில் இதுவரை அதிகாரிகள் தரவரிசையில் இருந்த பெண்கள், இனி மாலுமிகளாகவும் செயல்படுவர். இது இளம் பெண்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் எனவும், இந்திய கடற்படையின் சாதனை எனவும் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் தேர்ச்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பை ஏற்றபின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Embed widget