Watch Video: குட்டியானையின் சுட்டித்தனம்.. வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..
இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் குட்டியானையின் வீடியோ பகிர்ந்த பதிவி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரமெடுத்து இரணிய மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவுகூறும் விதமாக ஹோலித்திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். மேலும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள் தூவி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அதிகாலை முதலே கொண்டாட்டங்கள களைக்கட்டும். தமிழ்நாட்டில் விரைவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Playing Holi in his style 😊😊 pic.twitter.com/Vg1dIVlzl6
— Susanta Nanda (@susantananda3) March 5, 2024
இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா குட்டி யானை ஒன்று மகிழ்ந்து விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ ஹோலி இன் ஹிஸ் ஸ்டைல்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது அந்த குட்டி யானை அதன் பாணியில் ஹோலி பண்டிகை கொண்டாடி வருகிறது என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் குட்டி யானை ஒன்று அதன் மீது மண் மற்றும் தூசி ஆகியவற்றை அதன் தும்பிக்கையால் எடுத்து தலையில் போட்டு விளையாடிக் கொண்டிருப்பது இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதனை ரசித்த வண்ணம் கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.