(Source: ECI/ABP News/ABP Majha)
UPI MODI Update: இந்தியர்களே, பிரான்சு போறிங்களா..! இனிமே கையில காசே வேணாம், பிரதமர் மோடி சர்ப்ரைஸ் அப்டேட்..!
பிரான்சு நாட்டிலும் இனி இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரான்சு நாட்டிலும் இனி இந்தியாவின் ட்ஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பிரான்சு பயணம்:
பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் சிறை தகர்ப்பு தினத்தை ஒட்டி ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு ராணுவ அணி வகுப்பில் கலந்துகொள்ள, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில், அவர் பங்கேற்க உள்ளார்.
இந்தியா வம்சாவளியினரை சந்தித்த பிரதமர் மோடி:
அதன் ஒரு பகுதியாக பாரிஸ் நகரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது “பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதைவிட வேறு என்ன பெருமை என்ன இருக்க முடியும்?" என பேசினார்.
பிரான்சில் இந்தியாவின் யுபிஐ:
தொடர்ந்து, ”இந்தியாவின் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பிரான்சிலும் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பாரிசில் உள்ள ஈபிள் டவரை காண வரும் சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து, இந்த யுபிஐ சேவை தொடங்க உள்ளது. இதன் மூலம், இந்தியர்கள் இனி ரூபாய் மூலமாகவே பிரான்சிலும் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்” என தெரிவித்தார். இந்த அறிவிப்பால் ஈபிள் டவரை காண செல்லும் இந்தியர்கள் இன் கையில் காசோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களையோ கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, யுபிஐ சேவை பிரான்சில் படிப்படியாக பெரிய அளவில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுபிஐ பரிபவர்த்தனை:
பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையளாக் கூடிய வசதி தான் UPI (Unified Payments Interface) என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, ஜிபே, பேடிஎம், போன் பே போன்ற பல்வேறு செயலிகள் மூலம், டீ-க்கடை தொடங்கி நகைக்கடை வரையிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2022-ல் என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு லைரா எனப் பெயரிட்டிருந்தது. இந்த வருடம் சிங்கப்பூர் PayNow உடன் பயனர்கள் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளத்தில் ஏற்கனவே இந்தியாவின் UPI முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான், யுபிஐ பயன்பாட்டிற்கு பிரான்சும் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.