Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 12 ஆயிரத்து 772 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 561 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 884 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 254 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா
மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 9 ஆயிரத்து 350 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை அந்த மாநிலத்தி்ல் 59 லட்சத்து 24 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் இன்று மட்டும் அந்த மாநிலத்தில் 388 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மகாராஷ்ட்ராவில் கொரோனா வைரசால் 1 லட்சத்து 14 ஆயிரத்து 154 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் புதியதாக 11 ஆயிரத்து 805 நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சதது 78 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 1,563 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 793 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை உள்ளே வர தடை - பிலிப்பைன்ஸ் அரசு
கொரோனா பரவலின் இரண்டாம் அலை பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் அரசு அந்த நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வரும் ஜூன் 30-ந் தேதி வரை தடை விதித்துள்ளது.
ஜார்க்கண்டில் சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோயால் 2,303 நபர்கள் பாதிப்பு
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் 2 ஆயிரத்து 303 நபர்கள் தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,328 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மாநிலத்தில் மட்டும் 157 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர்.