Cheetah: வருக... வருக... 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் சிறுத்தை புலிகள்!
cheetah:ஆகஸ்ட் 15- ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு(Kuno National Park) சிறுத்தை அழைத்துவரப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள நம்பியா(Namibia) நாடும் இந்தியாவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (memorandum of understanding (MoU) ) கையெடுத்திட்டுள்ளன. இதன்படி, வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு(Kuno National Park) சிறுத்தை அழைத்துவரப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் எஸ்.பி.யாதவ் ( SP Yadav) இதுகுறித்து கூறுகையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்விதமாக, வரும் ஆகஸ்ட், 15 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிறுத்தைகளை கொண்டு வர பேச்சுவார்த்தையும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டு முறையாக சிறுத்தைகள் வரவழைக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் மாத்தில் 8 சிறுத்தைகள் அழைத்துவரப்பட உள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, குனோ தேசிய பூங்கா சிறுத்தைகளின் வாழிடமாக இருந்தது. தற்போது, மீண்டும் ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவிற்கு தங்கள் கூடுகளுக்கு திரும்ப உள்ளன.
ம்த்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) முதன்மை வன உயிர் நலவாழ்வு பாதுகாப்பு அதிகாரி (chief wildlife warden) ஜே.எஸ். செளஹான்( JS Chauhan) கூறுகையில்,” சிறுத்தைகளை வரவேற்க மாநிலத்தில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும், சிறுத்தைகளின் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தோடு, ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைகளை கொண்டு வருவதன் மூலம், 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறுத்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு நிறப் புள்ளிகள் உடல் முழுவதும் நிரம்பியிருக்க, அதிக வெப்பத்திலிருந்து கண்களைக் காக்க, எப்போதும் கண்ணீர் வழிவது போன்ற கறுப்பு நிறக் கோடுகளுடன் கூடிய மெலிதான உருவ அமைப்பு கொண்டது சிறுத்தைகள். மணிக்கு 70 மைல் (112 கிமீ) வேகத்தில் ஓடக்கூடிய திறன் வாய்ந்த பூனை வகையைச் சேர்ந்த விலங்கு, சிறுத்தை, இதுவும் புலியைப் போலவே பதுங்கிப் பாய்ந்து உணவை வேட்டையாடும் பழக்கமுடையது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பல மைல்கள் கடந்து ஐந்து ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் எட்டு சிறுத்தைகள் அழைத்துவரபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.