மேலும் அறிய

Gaganyaan: தொடர்ந்து பல்வேறு சாதனைகள் படைத்துவரும் இஸ்ரோ.. 2024ஆம் ஆண்டு விண்ணில் ஏவ தயாராக இருக்கும் ககன்யான்..

2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் மனித விமானம் "ககன்யான்" ஐ ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் மனித விமானம் "ககன்யான்" ஐ ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாராக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று அறிவித்தார். 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அறிவியல் துறையில் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது, இந்தியாவின் முதல் தன்னிறைவு பெற்ற ககன்யான் 2024 இல் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அரசு செய்து வரும் சாதனைகள் குறித்த தகவல்களை அளித்த ஜிதேந்திர சிங், “ககன்யான் திட்டத்தை 2022 ஆம் ஆண்டிலேயே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட்-19 காரணமாக அது தாமதமானது. அடுத்த ஆண்டில் (2024), இரண்டு கட்டங்களாக கக்ன்யானை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ஏவுதல் ஆளில்லாததாக இருக்கும், இந்த சோதனை ஓட்டம் ராக்கெட்டின் செயல்பாடுகள் குறித்து விளக்கும். ஏனெனில் ககன்யான் விண்ணில் செலுத்தப்பட்டால் அது பாதுகாப்பாக மீண்டும் பூமி திரும்ப வேண்டும். 

இரண்டாவது சோதனையிலும் மனிதர்களுக்கு பதிலாக ரோபோ பயணிக்கும். இரண்டு சோதனைகளும் முழிமையாக வெற்றி பெற்றால் மூன்றாவது முறை மனிதர்கள் பயணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ககன்யான் இந்தியாவின் முதல் மனிதனை ஏற்றிச்செல்லும் ராக்கெட்டாகும். ககன்யான் திட்டத்தின் மூலம் தேசத்தின் நம்பிக்கை அறிவியல் துறையில் உயரும் என நம்பப்படுகிறது.

இதற்கு முன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்றார், ஆனால் அவர் சோவியத் விண்வெளி பணியின் கீழ் சென்றார், எனவே ககன்யான் விண்வெளியில் இந்திய வம்சாவளியைக் குறிக்கும் சாதனையாக அமையும் என கூறிப்பிட்டார். 

இது ஒரு வரலாற்று முயற்சியாக இருக்கும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் விண்வெளி பயணம் மிகவும் தாமதமாக தொடங்கியது, ஆனால் இன்று அதே நாடுகள் இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப அறிவை ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்றனர்.   ஜிதேந்திர சிங் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி அறிவியலுக்கு அளித்த முக்கியத்துவம், இந்திய விஞ்ஞானிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை அளித்துள்ளது. விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் தனியார் ராக்கெட்டுகள் இஸ்ரோவிலிருந்து ஏவப்படுகிறது என தெரிவித்தார்.  

பெங்களூரில் பயிற்சி:

இந்திய விமானப்படையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் தற்போது பெங்களூருவில் பணி சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி வீரர்கள் ஏற்கனவே முதல் செமஸ்டர் பயிற்சியை முடித்துள்ளனர், அதில் அவர்கள் கோட்பாட்டு அடிப்படைகள், விண்வெளி மருத்துவம், ஏவுகணை வாகனங்கள், விண்கல அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பாடநெறி தொகுதிகளுக்கு உட்பட்டுள்ளனர். "வழக்கமான உடல் தகுதி, ஏரோமெடிக்கல் பயிற்சி மற்றும் பறக்கும் பயிற்சி ஆகியவை குழு பயிற்சியின் ஒரு பகுதியாகும். அதற்கான மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. இரண்டாவது செமஸ்டர் பணியாளர் பயிற்சி தற்போது நடந்து வருகிறது" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இஸ்ரோ இந்த ஆண்டு நவம்பரில் ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர்ட்ராப் சோதனையை (IMAT) நடத்தியது. உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பாபினா ஃபீல்ட் ஃபயர் ரேஞ்சில் (BFFR) சோதனை நடத்தப்பட்டது, இந்த சோதனையின் போது 5 டன் டம்மி மாஸ், க்ரூ மாட்யூல் மாஸ்க்கு சமமான, 2.5 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு. இந்திய விமானமான  IL-76 பயன்படுத்தப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget