மேலும் அறிய

ஜெர்மனியின் நுட்பமும் இந்தியாவின் திறனும் இணைந்தால் உலகத்துக்கே உதவலாம்- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (சிசிபிஐ) தற்போது 7 வது இடத்தில் இந்தியா உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஜெர்மனியின் துல்லியமான பொறியியல் கலையும், கட்டமைப்பு, டிஜிட்டல் அல்லது சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் திறனும் இணைந்து உலகிற்கு அசாதாரணமான ஒன்றை உருவாக்க உதவும் என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். 

ஆசிய பசிபிக் மாநாடு:   

புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஜெர்மன் வர்த்தகத்தின் 18-வது ஆசிய பசிபிக் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு குறித்து பேசிய மத்திய அமைச்சர், செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வது முதல் குறைக்கடத்திகள் வரை, நாட்டின் துடிப்பான புத்தாக்க சூழல் அமைப்பை வளர்ப்பது முதல் பசுமை தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான ஒருங்கிணைப்பானது வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

7 வது இடத்தில் உள்ள இந்தியா:

இன்றைய இந்தியா வலுவான பேரினப் பொருளாதார அடிப்படைகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உலகெங்கிலும் உள்ள வணிகர்களின் எதிர்காலத்திற்கான சீர்திருத்தம், பின்னடைவு மற்றும் தயார்நிலை ஆகியவை இங்கு உள்ளதாக கூறினார். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது குறித்துப் பேசிய கோயல், 2015-ல் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP21) இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டினார். பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (சிசிபிஐ) தற்போது 7 வது இடத்தில் உள்ள இந்தியா, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளையும் (என்டிசி) விஞ்சும் பாதையில் உள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

60% மக்கள்: 

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக, ஜெர்மன் வர்த்தகத்திற்கான ஆசிய பசிபிக் குழு மற்றும் இந்தோ-ஜெர்மன் வர்த்தக சபைக்கு நன்றி தெரிவித்த  கோயல், ஆசிய-பசிபிக் பிராந்தியம் உலக மக்கள் தொகையில் 60%-ஐ உள்ளடக்கியது என்றும், 2030-ம் ஆண்டில், உலகில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆசியாவில் வசிப்பார்கள் என்றும் கூறினார்.  மக்கள்தொகையில் ஏற்படும் இந்த மாற்றம் தனது எல்லையை விரிவுபடுத்தவும் உருவாகி வரும் தொழில் பிரிவுகளில் ஆதாயம் ஈட்டவும் வணிகர்களுக்கு  வளமான பின்னணியை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

வளர்ந்து வரும் போக்குகளை அடையாளம் காண்பதிலும் உலகளாவிய சவால்களை சமாளிப்பதிலும் இந்த மாநாடு முக்கியமானதாக இருக்கும் என்று கோயல் வலியுறுத்தினார். இது சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதை எளிதாக்குகிறது,தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு உந்துதல் அளிக்கிறது மற்றும் எதிர்கால தொழில்துறை வளர்ச்சிக்கான கொள்கைகளை வடிவமைக்க உதவுகிறது என்று அவர் கூறினார். இந்தியாவும் ஜெர்மனியும் ராஜ்ஜிய கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, இந்த ஒத்துழைப்பை இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் உண்மையான வளர்ச்சியாக மாற்ற முடியும் என்று மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

”கனவு காணுங்கள்”:

இந்த பண்டிகை காலத்தில், தீபாவளி முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையின் செழுமையை  பின்பற்றுமாறு பங்கேற்பாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

தமது உரையின் நிறைவாக ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய கோயல், "உயரத்தை அடையுங்கள், ஏனென்றால் நட்சத்திரங்கள் உங்களுக்குள் மறைந்துள்ளன. ஆழமாகக் கனவு காணுங்கள், ஏனெனில் ஒவ்வொரு கனவும் இலக்கை முந்துகிறது" என்றார். தயாரிப்புகள், தொழில்கள் வழிநடத்திய மற்றும் முன்னோடியான கண்டுபிடிப்புகள், உலகின் ஒவ்வொரு மூலையையும் தொடும் எதிர்காலத்தை உருவாக்குமாறு பங்கேற்பாளர்களை வலியுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Embed widget