மேலும் அறிய

Opposition MPs: ”பிரதமரின் அலட்சியம்..மத்திய, மாநில அரசுகளின் தோல்வி..” மணிப்பூர் சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் குற்றச்சாட்டு

இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய குழு மணிப்பூருக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மணிப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டை உலுக்கி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  பெண்களை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாதிக்கப்பட்ட பெண்களை, பின்னர், அந்த கொடூர கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்த சம்பவம், நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மணிப்பூருக்கு சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள்:

கடந்த ஜூலை 20ஆம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மணிப்பூர் விவகாரத்தால் முற்றிலும் முடங்கி போயுள்ளது. மணிப்பூர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், குறுகிய விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதனால், நாடாளுமன்றத்தின் அனைத்து அவை நடவடிக்கைகளும் முடங்கி போயுள்ளன. இதற்கிடையே, இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் அடங்கிய குழு மணிப்பூருக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று இம்பாலுக்கு விமானம் மூலம் சென்ற அவர்கள், சுராசந்த்பூர், விஷ்ணுபூர் உள்பட வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர். அப்போது, மக்கள் தங்களிடம் பகிர்ந்து கொண்டவற்றையும் தங்களின் அனுபவங்களையும் எம்பிக்கள் குழு ஆளுநரிடம் பகிர்ந்து கொண்டனர்.

"அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன"

இதனை தொடர்ந்து, ஆளுநரிடம் அவர்கள் அளித்த கடிதத்தில், "அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த, பாதிக்கப்பட்ட நபர்களின் மறுவாழ்வு மற்றும் குடியேற்றம் மிகவும் அவசரமானது. மணிப்பூரில் கடந்த 89 நாட்களாக சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம், மணிப்பூரில் நடந்த வன்முறையில் அவரின் வெளிப்படையான அலட்சியத்தைக் காட்டுகிறது. கலவரத்தால் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மாதிரியாக இரு சமூகத்தினரின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியே தெரிகிறது. 

கடந்த சில நாட்களாக இடைவிடாத துப்பாக்கிச் சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைப்புச் செய்திகள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன என்பதை நிறுவுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!
IRCTC இணையதளம் மேம்பாடு: இனி நொடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு!
IRCTC இணையதளம் மேம்பாடு: இனி நொடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு!
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget