11 AM Headlines: டெல்லி விரையும் முதலமைச்சர், கடன் பிரச்னையால் குடும்பமே தற்கொலை - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டு பெற நாளை (செப்.26) டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வலியுறுத்துகிறார்
புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
இளங்குடிப்பட்டி அருகே காரில் சடலமாக இருந்த 5 பேர் சடலமாக மீட்பு. கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்வதாக சிக்கிய கடிதம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, மகன், மகள் மற்றும் மாமியார் என 5 பேரும் தற்கொலை செய்துள்ளது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை
தங்கம் விலை புதிய உச்சம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.7,060க்கு விற்பனை
சென்னையில் புதிய ஆலை அமைக்கிறது ஃபாக்ஸ்கான்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை, ரூ.8,300 கோடியில் சென்னை ஒரகடத்தில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம். ஒரகடத்தில் ஏற்கனவே உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைக்கு அருகிலேயே, 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய ஆலைக்கான நிலத்தை தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல்
விமானத்தில் திடீர் கோளாறு - புகை கிளம்பியதால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விமானத்தில் இருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு. தீயணப்பு வீரர்கள் உடனடியாக தண்ணீரைப் பீச்சி அடித்து, புகையை நிறுத்தினர். விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, இரண்டரை மணி நேரம் தாமதமாக, நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு, 314 பயணிகளுடன் துபாய்க்குப் புறப்பட்டது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த DGCA உத்தரவு
உளவியல் பிரச்னையால் போலி புகார்
தேனியில் காரில் வந்த மர்ம கும்பல் தன்னை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக நர்சிங் மாணவி நேற்று முன்தினம் புகார் அளித்தார். மருத்துவ பரிசோதனையில், ”மாணவி கடத்தப்படவோ, பாலியல் வன்கொடுமை செய்யப்படவோ இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மன அழுத்த பாதிப்பால் இப்படி செய்துள்ளார். உளவியல் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என மாவட்ட எஸ்.பி. விளக்கம்
ஜம்மு & காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல்
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 26 தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கன்டெய்னர் லார் மீது கார் மோதி விபத்து
ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு 7 நபர்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - நவ.14ல் தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அனுரா குமார திசாநாயகே உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லாத வகையில், கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
பிசிசிஐ ஆலோசனை
இந்திய கிர்க்கெட் வாரியட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. இதில் ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.