18 வயதில் வாக்களிக்கலாம்.. திருமணம் மட்டும் கூடாதா? 16-இல் கூட செய்யலாம்.. சமாஜ்வாதி எம்.பியின் சர்ச்சை பேச்சு
18 வயதில் வாக்களிக்க முடியும் என்றால், ஏன் திருமணம் செய்யக்கூடாது - எம்.பி. எஸ்.டி. ஹசன்
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர உரையில் பேசியபோது, ‘மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பெண்களின் திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, இந்தக் குழு பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்த பரிந்துரை செய்தது.
குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரை பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
#WATCH | Girls should be married when they attain age of fertility. There is nothing wrong if a mature girl is married at 16. If she can vote at age of 18, why can't she marry?: Samajwadi Party MP ST Hasan on Govt's decision to raise legal age of marriage for women to 21 years pic.twitter.com/UZxHrMcjrh
— ANI (@ANI) December 17, 2021
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு சமாஜ்வாதி எம்.பி. எஸ்.டி. ஹசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பெண்கள் கருவுறும் வயதை அடைந்தவுடன் திருமணம் செய்துவைக்க வேண்டும். பக்குவமான பெண்ணுக்கு 16 வயதில் திருமணம் செய்துவைத்தால் கூட எந்தத் தவறுமில்லை. 18 வயதில் வாக்களிக்க முடியும் என்றால், ஏன் திருமணம் செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Raising Marriage Age | புதிய திருமண வயது 21: பெண்களுக்கு வரமா, சாபமா?