20 கிலோ RDX.. 20 ஸ்லீப்பர் செல்கள்.. பிரதமரைக் கொல்ல திட்டம்.. என்.ஐ.ஏவுக்கு வந்த மிரட்டல் என்ன?
பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல். தேசிய புலனாய்வு முகமைக்கு இது குறித்து விசாரணை செய்து வருகிறது.

தேசிய புலனாய்வு முகமையின் (national investigation agency)மும்பை கிளைக்கு, என்னிடம் 20 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லப்போவதாகவும் மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் மிரட்டக் விடுத்துள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை, மின்னஞ்சல் கடிதத்தில், என்னிடம் இருக்கும் 20 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி பொருளின் மூலம் பிரதமருடன் சேர்ந்து லட்சக்கணக்கான மக்களுக்கு தீங்கு விளைவிக்க தயாராக இருப்பதாக மிரட்டல் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
’நான் சில தீவிரவாதிகளை சந்தித்தேன், அவர்கள் மூலம் எனக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது நான் எல்லா இடங்களிலும் வெடிகுண்டுகள் வைக்க திட்டமிட்டுள்ளேன், 20 ஸ்லீப்பர் செல்கள் என்னுடம் இணைந்து கொள்வார்கள். இதனால் இலட்சக்கணக்கான மக்கள் மக்கள் கொல்லப்படுவார்கள்.’என்று அந்தக் கடித்தில் குறிப்பிடப்படுள்ளது.
புலனாய்வு அமைப்புகள் இதை அனுப்பியவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறது.
மின்னஞ்சல் அனுப்பியசரின் ஐபி முகவரியைக் கண்காணித்து வருவதாகவும், அனுப்பியவர் பற்றிய பிற தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதுவரை, தேசிய புலனாய்வு முகமை இது தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.





















