Crime : வரதட்சணை ஏன் தரல? நண்பர்களுடன் சேர்ந்து மனைவிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..
பெண்ணின் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை சக்கேரி காவல் நிலையத்தில் அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளனர்.
வரதட்சணை கொடுக்கத் தவறியதால் மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கேங் ரேப் செய்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கான்பூரில் நடந்துள்ளது.
வரதட்சணை கொடுமை
வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் வந்த பிறகும் வரதட்சணை நம் சமூகத்தை விட்டு அகல வில்லை. அது போகவில்லை என்றாலும், அதனால் தொடரும் அவலங்களும் இன்னும் குறைந்த பாடில்லை. வரதட்சணை தராததால் கொடுமை படுத்தப் படுவது, அடிக்கப் படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற பிரச்னைகளை பெண்கள் அனுபவித்துதான் வருகின்றனர்.
அடித்து துன்புறுத்தல்
கான்பூரின் சக்கேரி என்னும் ஊரில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பல நாட்களாவவே கொடுக்கிறேன் என்று கூறிய வரதட்சணையை கொடுக்காமல் இருப்பதால் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதனை எதிர்த்து கேட்கமுடியாமல் இருத்து வந்த அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு செல்வராம்.
காவல்துறையில் புகார்
இந்த நிலையில், ஒரு நாள் நண்பர்களோடு வந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப் பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை சக்கேரி காவல் நிலையத்தில் அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளனர். தனக்கு மார்ச் 6, 2020 அன்று திருமணம் நடந்ததாகவும், அதன்பிறகு, தனது கணவரும், மைத்துனரும் வரதட்சணையாக ரூ.2 லட்சமும், காரும் கேட்டதாகவும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை
அவர்கள் கேட்டதுபோல வரதட்சணை கோரிக்கைகளை நிறைவேறாததால், அந்த பெண்ணை ஒரு அறையில் வைத்து அடைந்துள்ளார் அவரது கணவர். அதுமட்டுமின்றி, ஒரு நாள் தனது கணவர் தனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்து வந்ததாகவும், அவர்கள் நால்வரும் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் கூறினார்.
வழக்குப்பதிவு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி கேட்டபோது, தனது கணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் உதவி ஆணையர் (ஏசிபி) மிருகங்க் பதக் தகவல் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்