SC on Hijab Row: “ஹிஜாப் பிரச்னையை தேசிய பிரச்னையாக்க வேண்டாம்” - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
SC on Hijab Row: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்ப, மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், “ஹிஜாப் பிரச்னையை தேசிய பிரச்னையாக்க வேண்டாம்” என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஹிஜாப் பிரச்சனையை தேசிய பிரச்சனையாக்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.
Supreme Court refuses to give an urgent hearing on plea challenging interim order of Karnataka High Court.#HijabRow pic.twitter.com/Yr9Qr7RCpO
— ANI (@ANI) February 11, 2022
ஹிஜாப் பிரச்னை தீவிரமாக, கடந்த பிப்ரவரி 7 அன்று கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறொரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை.
இதனால், முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பிப்ரவரி 8-ம் தேதி தனி நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், ஹிஜாப் அணியும் மாணவிகள் தரப்பில் இருந்து வாதாடினார். அவர், ''முஸ்லிம் கலாச்சாரத்தில், பெண்கள் தலையில் ஹிஜாப் அணிவது அடிப்படையான ஒன்று'' என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் , ''கல்லூரி சீருடைகளைத் தீர்மானித்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தைக் கல்லூரிகளுக்குக் கொடுத்துவிட்டோம். விதிமுறைகளில் தளர்வு தேவைப்படும் மாணவர்கள், கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுகலாம்'' என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தீட்சித், ஜிஹாப் விவகாரம் தேசிய அளவிலான பேசுபொருளாக மாறியுள்ளதால், இந்த வழக்கைக் கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உரிய நேரத்தில் விசாரிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்