மேலும் அறிய

7AM Headlines : 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.. மீண்டும் கைதான மீனவர்கள்.. போர்ச்சுக்கல் அணி வெற்றி.. இன்னும் பல செய்திகள்..

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தாலும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி 
  • அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை தூண்டும் வகையில் 13,210 பள்ளிகளில் வானவில் மன்றம்: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
  • கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
  • கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
  • எந்த விதத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு கூடாது என்பது தான் அனைவரது நிலைப்பாடும் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
  • ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் 3 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
  • இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா:

  • அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம்; கேரளாவில் காவல் நிலையத்தை சூறையாடிய 3000 பேர் மீது வழக்கு - உதவி கமிஷனர் உட்பட 36 போலீசார் காயம்
  • முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1 ம் வாக்குப்பதிவு; குஜராத்தில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது
  • டெல்லியில் பயங்கரம்: கணவனை கொன்று 10 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி 
  • நீதிபதிகள் நியமனத்தில் கொல்ஜியம் எடுக்கும் முடிவுகளை மத்திய அர்சு பின்பற்ற வேண்டும் ; உச்சநீதிமன்றம் காட்டம்
  • பிரதமர் மோடி அழைப்பை ஏற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் டிசம்.4ல் டெல்லி பயணம்: அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது.
  • ஜனவரி 1, 2023 முதல் அனைத்து இந்திய சேனல்களும் 'தேச நலன்' சார்ந்து 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • பெண்கள் ஆடைகள் அணியாவிட்டாலும், அழகாக இருக்கிறார்கள் என பாபா ராம்தேவ் பேசியது கடுமையான விமர்சனுத்துக்கு உள்ளான நிலையில், அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உலகம்:

  • கொரொனா பரவல் காரணமாக சீன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து நாடு முழுவதும் பரவி வருகிறது.
  • பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் கூடியிருந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
  • சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை எட்டியுள்ளதாலும், கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடி வருவதாலும் அந்த நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று, வானில் பறந்தபோது உயர்மின் கோபுரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இங்கிலாந்து நாட்டில் 100 பன்னாட்டு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால் போதும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

விளையாட்டு:

  • விஜய் ஹசாரே போட்டித் தொடரின் கால் இறுதிப் போட்டியில் மஹாராஸ்ட்ரா அணிக்காக ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
  • உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவிடன் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது தோல்வியை சந்தித்தது என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. 
  • விஜய் ஹசாரே போட்டியில் இந்த எடிஷனில் அதிக ஸ்கோர் விளாசிய வீரராக தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை படைத்தார்.
  • உலகக்கோப்பை கால்பந்து தொடர்: உருகுவே அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது போர்ச்சுக்கல் அணி வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
Embed widget