(Source: ECI/ABP News/ABP Majha)
Headlines Today: தமிழகத்தில் தொடரும் மழை; சென்னையை நடுங்கவைக்கும் பனிப்பொழிவு - இன்னும் பல முக்கியச்செய்திகள்
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
மயானங்களை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதிய பாகுபாடை உடைக்க முடியவில்லை என வேதனை
கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளையாட்டு திடலை திறந்து வைத்து, இறகுபந்து விளையாடி மகிழ்ச்சி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீற்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ரவியை சந்தித்தப்பின் பேட்டி, 350 ரூபாய் பேனருக்கு 7,906 ரூபாய் செலவா எனக் கேள்வி
இந்தியா
தேர்தல் ஆணையம் என்பது அரசின் தலையாட்டி பொம்மையாக இருக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் தொடர்பான நியமணத்தில் சீர்திருத்தம் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.
அருண்கோயல் தேர்தல் ஆணையராக நியமணம் செய்யப்பட்டது தொடர்பான கோப்புகள் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணையில் இருக்கும் போது நியமணம் செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி
உலகம்
சூரியனின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்த சீனா, அக்டோபர் மாதம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியீடு
ஜெருசலேம் நகரத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுவன் பலி; 14 பேர் படுகாயம்
விளையாட்டு
ஃபிபா உலகக் கோப்பைத் கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான். 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வெற்றி.
ஃபிபா உலகக் கோப்பைத் கால்பந்து லீக் போட்டிகளில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணி வெற்றி