மேலும் அறிய
Advertisement
Today Headlines: படிப்படியாக குறையும் மழை.. பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணம்.. இன்னும் பல முக்கியச் செய்திகள்
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும்; அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
- தென்கிழக்கு வங்கக்கடலில் 16ம் தேதி உருவாக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு; புயலாக மாறினால் கடலூர் - நாகை இடையே கரையைக் கடக்கும்
- சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆய்வு
- வங்கக்கடலில் புயல் சின்னம் உருவெடுப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுப்பு - கடலூரில் மட்டும் இழுவைப் படகுகள், நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க செல்ல அனுமதி
- பொறியியல் கடந்தாய்வில் 4 சுற்றுகள் நிறைவு; கடந்த ஆண்டை விட ஆயிரத்து 975க்கு அதிகமான மாணவர் சேர்க்கை
- 12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழக அரசு தமிழில் அறிமுகம் செய்து விட்டது - மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் பொன்முடி பதில்
- குரூப்2, 2ஏ மெயின் தேர்வுக்கு 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- அனைத்து உரிமைகளும் குழந்தைகளுக்கு கிடைக்கும் : முதலமைச்சர் முக ஸ்டாலின் குழந்தைகள் தின நாள் வாழ்த்து
இந்தியா:
- ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா பயணம் ; உலக தலைவர்களுடன் பங்கேற்பு
- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து மேற்குவங்க அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
- உலகின் நீண்ட தூரம் பறக்கக்கூடிய புலம்பெயர் பறவையான அமூர் பருந்துகளின் பாதுகாப்பு குறித்தும் அவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணிப்பூரில் திருவிழா ஒன்றை வனவிலங்கு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
- மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள 61 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
உலகம்:
- அமெரிக்காவில் சோகம்; வானில் சாகசம் செய்தபோது 2 விமானம் மோதி வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு
- துருக்கி: இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி; 53 பேர் படுகாயம்
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபையை ஜோ பைடன் கட்சி கைப்பற்றியது
- அமெரிக்கா, சீனா பெயரில் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிக்கப்பட கூடாது: ஐ.நா. தலைவர் ஆன்டனியோ குடரெஸ்
- விண்வெளியில் புதிதாக அமைக்கும் டியாங்காங் ஆய்வு மையத்திற்கு டியான்ஷு-5 என்ற சரக்கு விண்கலத்தை வெற்றிக்கரமாக சீனா அனுப்பியது.
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பை தொடர் : பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன்.
- டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.13.84 கோடி பரிசு
- உலகின் புகழ்பெற்ற கிளப் கால்பந்து தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் லிவர்பூல் அணியை வாங்க இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியது.
- புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை 40-34 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion