மேலும் அறிய
Advertisement
Today Headlines: வட மாநில வெள்ளம் முதல்.. செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை வரை.. இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நியாய விலைக் கடையில் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
- அமலுக்கு வந்தது பத்திரப்பதிவு கட்டண உயர்வு
- அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
- மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - மூன்றாவது நீதிபதிதீர்ப்பு வழங்க அதிக வாய்ப்பு
- 234 தொகுதியைச் சார்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்திக்கிறார் நடிகர் விஜய்
- மதுபான கடை நேரத்தை மாற்றி அமைக்க ஆலோசித்து வருகிறோம் - அமைச்சர் முத்துசாமி
- கூலிப்படையை ஒழிக்க செங்கல்பட்டில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்.
- தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
- பாஜகவினரைச் சந்திக்க நேரம் ஒதுக்க முதலமைச்சருக்கு அண்ணாமலை கோரிக்கை
- பிரிவினையை உண்டாக்கும் வகையில் பதிவிட்ட இந்து முன்னணி மாநில நிர்வாகி கனல் கண்ணன் மீண்டும் கைது
இந்தியா:
- 50 ஆண்டுகள் காணாத பெருமழையை சந்தித்துக்கொண்டிருக்கும் இமாச்சல பிரதேசம் - வெள்ளத்தில் தத்தளிப்பு
- ஹரியானாவில் பள்ளிக்கட்டிடத்தை சூழ்ந்த வெள்ளம்; 730 மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு
- உத்ரகாண்டில் கங்கை ஆற்றில் வெள்ளம் - நிலச்சரிவால் பல்வேறு சாலைகள் துண்டிப்பு
- டெல்லியில் அதிகப்படியான மழை - யமுனை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - வழக்குகளை காணொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள்
- உத்திரபிரதேசத்தில் 17 ரயில்கள் மாற்றி அமைப்பு; பாலங்களை அடித்துச் சென்ற வெள்ளம்
- மழையால் பாதிக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக வாக்குறுதி
- மனைவி என்பவர் கணவனின் துணை மட்டும் அல்ல; கனவுகளை தேடிச்செல்ல உரிமை உண்டு - உச்சநீதிமன்றம்
- 50வது ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
உலகம்
- நேட்டோவில் இணைய ஸ்வீடனுக்கு துருக்கி ஆதரவு
- நேட்டோ உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
- ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் கொப்பளிக்கும் நெருப்பு குழம்பு
விளையாட்டு
- நாளை துவங்குகிறது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி
- தமிழ்நாடு ப்ரீமியர் லீக் குவாலிஃபையர் இரண்டாவது சுற்றில் திண்டுக்கல்லை வீழ்த்தி நெல்லை அசத்தல்
- விம்பிள்டன் நடப்புச் சாம்பியன்களான ஜோகோவிச் மற்றும் ரைபகினா காலிறுதிக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion