Headlines Today, 17 Aug: சமையல் கேஸ் விலை அதிகரிப்பு...இந்திய அணி அபார வெற்றி..இன்னும் பல..!
Headlines Today, 17 Aug: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
* ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் நாட்டை விட்டு தப்பி ஓட விமான நிலையத்தில் மக்கள் குவிந்தனர்.
* ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து கனடா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
* ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், காபூல் விமான நிலையத்தில் சிலர் விமானத்தின் டயர்களை கட்டிப்பிடித்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
* வரும் செப்டம்பரில் பள்ளிகள் திறக்க 2 நாளில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
* தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
* பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐமு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026க்குள் மேலும் ரூ.37000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்றார்.
* சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 165 ரூபாய் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
* லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும்.
* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1851 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,90,632ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 217 பேரும், சென்னையில் 205 பேரும், ஈரோட்டில் 151 பேரும், சேலத்தில் 123 பேரும், செங்கல்பட்டில் 112 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
* பிரபல சன் மியூசிக் தொகுப்பாளரும், சினிமா நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம் அடைந்தார். புற்றுநோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
* சீனாவைச் சார்ந்து வாழும் நிலை அதிகரித்தால் நிச்சயம் இந்தியா அந்நாட்டிடம் தலை வணங்க வேண்டியிருக்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
* சார்பட்டா பரம்பரை தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் அதிமுக சார்பாக வழக்கறிஞர் ஆர்.எம். பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
* அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.
* உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.