Headlines Today : இன்று நடக்குமா அதிமுக பொதுக்குழு? குறையும் கொரோனா.. இன்றைய தலைப்புச் செய்திகள்!
இன்றைய முக்கியச் செய்திகள் சில...
![Headlines Today : இன்று நடக்குமா அதிமுக பொதுக்குழு? குறையும் கொரோனா.. இன்றைய தலைப்புச் செய்திகள்! headlines on july11th 2022 India Tamilnadu Important news Top Headlines Today : இன்று நடக்குமா அதிமுக பொதுக்குழு? குறையும் கொரோனா.. இன்றைய தலைப்புச் செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/11/555cb1571fdac6e5f790960d48b1a0261657502787_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா..
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது
நாடு முழுவதும் 'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாக வாய்ப்பு
குஜராத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை - பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
அசாம் வெள்ளத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு - உயிரிந்தோரின் எண்ணிக்கை 192ஆக அதிகரிப்பு
தமிழ்நாடு..
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிகிடைக்குமா? இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது
சென்னை வாகனகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம்
இன்று அதிமுக பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் வானகரத்தில் அமைக்கப்பட்ட பேனர் கிழிப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கோயம்பேடு-பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
நெல்லையப்பர் கோயிலில் இன்று தேரோட்டம் - பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் குறையும் கொரோனா - தமிழ்நாட்டில் ( 08.07.2022) புதிதாக 2,772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18, 687 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.
நடிகர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷிவன்ஸ்ரீநிவாஸ் வெற்றி,பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் போஸ்வெங்கட் வெற்றி
விளையாட்டு..
சூர்யகுமார் யாதவ் சதம் வீண்.. கடைசி டி20ல் ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் பிசிசிஐக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது
7வது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்று சாம்ப்ரஸ் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்
உலகம்..
கொழும்பில் உள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அங்கு உயர் பாதுகாப்பு பதுங்கு குழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)