Gyanvapi Mosque Issue : ”க்யான்வாபி மசூதி நிலம், ஆதி விஸ்வேஸ்வரருக்குச் சொந்தமானது” இந்து அமைப்பினர் வாதம்..
இஸ்லாமியர்கள் தற்போது வழிபாடு செய்து கொண்டிருக்கும் க்யான்வாபி மசூதி இருக்கும் இடம் ஆதி விஸ்வேஸ்வர் மகாதேவுக்கு சொந்தமானது என்று நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் தற்போது வழிபாடு செய்து கொண்டிருக்கும் க்யான்வாபி மசூதி இருக்கும் இடம் ஆதி விஸ்வேஸ்வர் மகாதேவுக்கு சொந்தமானது என்று நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதனை ஒட்டியபடி பழமையான கியான்வாபி மசூதியும் அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் ஒளரங்கசீப் இந்த மசூதியைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, இதனை, மூத்த நீதிபதி விசாரிப்பார் என்று கூறி மாவட்ட நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
க்யான்வாபி மசூதி வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏகே விஸ்வேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து மனுதாரர்கள் சார்பாக ஹரிஷங்கர் ஜெயின் ஆஜராகி வாதிட்டார். அப்போது, “இந்த வழக்கில் வழிபாடுச் சட்டம் 1991 இந்த வழக்கிற்குப் பொருந்தாது. இந்த நிலம் இஸ்லாமியர்களுக்குச் சொந்தம் என்று அவர்கள் கோருகிறார்கள். ஆனால் இந்த இடம் கடவுள் விஸ்வேஸ்அர் மகாதேவிற்குச் சொந்தமானது. இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக இந்த இடத்தில் வழிபாடு செய்கின்றனர்” என்றார்.
ஆதிவிஸ்வேஸ்வரருக்கு சொந்தமான இடம்:
இந்துக்களின் அடையாளங்கள் இந்த க்யான்வாபி மசூதியின் வடக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த நிலம் கடவுள் ஆதிவிஸ்வேஸ்வருக்குச் சொந்தமானது என்று நிரூபிக்கிறது என்று வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் வாதிட்டார். இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையரும் உடனிருந்தார். பின்னர் வழக்கின் விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும்போது மற்ற இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர்களின் வாதங்களையும் நீதிபதி கேட்கவிருப்பதாக கூறியுள்ளார். கடந்த 12ம் தேதி இஸ்லாமிய மனுதாரர்களின் வாதங்களை நீதிபதி கேட்டறிந்தார்.
ரிட் மனு தாக்கல்:
க்யான்வாபி மசூதி நிர்வாகம் இந்த வழக்கில் இருந்து இந்து மனுதாரர் விஷ்ணு ஜெயினை நீக்கவேண்டும் என்று ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், விஷ்ணு ஜெயின் இந்த வழக்கினை இரண்டு பக்கம் இருந்தும் தலைமை தாங்குகிறார். எனினும், தான் இந்து மனுதாரர்களுக்கு ஆதரவாக வாரணாசி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசின் சார்பாக ஆஜராகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே இந்து மனுதாரர்கள் தரப்பில் வாதாடி வரும் விஷ்ணு ஜெயின் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் விஷ்ணு ஜெயின் இருப்பதாகவும், அதே அமைப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இருப்பதாகவும், எனவே இவர் இந்துக்களுக்கு எதிராக செயல்படு வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.